உத்தரப் பிரதேசம், பரேலி மாவட்டத்தின் தேவானிய பகுதியில் நயீ பஸ்தியில் வசிக்கும் ஹிந்து பெண் தன் தேவி, முகமது ஆலிம் என்பவரால் ஒன்றரை வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். ஆலிம்,அந்த பெண் படிக்கும் அதே பயிற்சி மையத்தின் மாணவராக இருந்தார். அந்த பெண்ணிடம் ஆனந்த் என்ற போலி ஹிந்து அடையாளத்துடன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பழகி தனது காதல் வலையில் விழ வைத்தார். தன் தேவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து அவருடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக்கொண்டார். அவர்களது வீடியோவைப் பதிவு செய்தார். பின்னர், தனது கோரிக்கைகளுக்கு எல்லாம் இணங்கவில்லை என்றால் அவற்றைதை இணையத்தில் பதிவேற்றுவதாகவும் அச்சுறுத்தினார். இந்த சூழலில், அந்த பெண் கர்ப்பமடைநார். ஜாதோபூரில் உள்ள முகமது ஆலிமின் மூதாதையர் வீட்டிற்குச் சென்றபோதுதான் அவரது உண்மையான அடையாளம் பற்றி தன் தேவி தெரிந்துகொண்டார். ஆலிமின் குடும்பத்தினர் அந்த பெண்ணை குழந்தையை கருக்கலைப்பு செய்துவிட்டு முஸ்லிம் மதத்திற்கு மாறி வேண்டும் என்றும் அதன் பிறகே ஆலிமுடன் திருமணம் செய்து வைக்கப்படும் என கூறினர் ஆனால் அந்த பெண் மதம் மாற மறுத்ததை அடுத்து, ஆலிமின் குடும்பத்தினர் அவரை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினர். பின்னர் அது ஹபீஸ்கஞ்சில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் வைத்து கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு, ஆலிமும் அவரது குடும்பத்தினரும் தன் தேவியை யாரிடமாவது எப்போதாவது இந்த சம்பவத்தைப் பற்றி சொன்னால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மிரட்டினர். இருப்பினும், பாதிக்கப்பட்ட அந்த பெண் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராக மே 29 அன்று தேவரானியன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்து வரும் காவல்துறை குற்றவாளியை தற்போது வரை கைது செய்யவில்லை.