நவி மும்பையில் ஒரு லவ் ஜிஹாத்

நவி மும்பையில் கடந்த டிசம்பர் 17 அன்று, காடி ஆற்றின் அருகே 27 வயது பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.இறந்த பெண் உர்வி வைஷ்ணவ் என அடையாளம் காணப்பட்டார்.இவர் டிசம்பர் 13ம் தேதி கோபர் கைரானே பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து காணாமல் போனார்.உர்வி வைஷ்ணவின் குடும்பத்தினர், அவரது லிவ் இன் பார்ட்னர் ரியாஸ் கான் அவரைக் கொன்றுவிட்டு, அவரது உடலை ஒதுக்குப்புறமான இடத்தில் வீசியதாக குற்றம் சாட்டினர்.ராஜஸ்தானின் பூண்டியைச் சேர்ந்த ஊர்வி, கடந்த 6 முதல் 7 ஆண்டுகளாக மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.அப்போது, ரியாஸ் கான் என்ற முஸ்லிம் நபருடன் பழகினார்.இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்து வந்தனர்.சில காலத்திற்குப் பிறகு, உர்வி வைஷ்ணவ், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரியாஸ் கானை வற்புறுத்தினார்.இதனால் அவரை ரியாஸ் கான் கொடூரமாக கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளார். இந்த வழக்கு குறித்து தெரிவித்த நவி மும்பையின் குற்றப்பிரிவு டி.சி.பி அமித் காலே, ரியாஸ் கான் முன்பு ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்ததை நாங்கள் கண்டுபிடித்தோம். கான்சோலியில் அந்த நபரைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு நாங்கள் வழக்கை மேலும் ஆராய்ந்தோம் மற்றும் அப்பகுதியில் உள்ள பல உடற்பயிற்சி கூடங்களைச் சரிபார்த்தோம்.சிசிடிவி ஆதாரங்களை ஆய்வு செய்தோம்.பின்னர், இந்த கொடுரக் கொலையில் இணை குற்றவாளியான இம்ரான் ஷேக்கை பிடித்து காவலில் எடுத்து விசாரித்தோம்.அவர் ரியாஸ் கான் பற்றி எங்களிடம் கூறினார்.மேலும், அந்த பெண்ணின் உடலை காடி ஆற்றில் வீச ரியாஸுக்கு உதவியதையும் இம்ரான் ஷேக் ஒப்புக்கொண்டார்” என தெரிவித்தார்.முக்கிய குற்றவாளியான ரியாஸ் கானுக்கு ஏற்கனவே 3 மனைவிகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.