ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் கெரேதாரி கிராமத்தில் ஒரு ஹிந்து குடும்பம் வசித்து வருகிறது. அதே பகுதியில் வசித்து வருபவர் முக்தார் அன்சாரி மகன் ஷாகித் அன்சாரி. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வேலை பார்த்து வருகிறார். அந்த ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை லவ்ஜிகாத் மூலம் காதல் வலையில் வீழ்த்திய ஷாகித் அன்சாரி, ஆறு மாதங்களுக்கு முன்பு, அவர்கள் வீட்டுக்கு தனது தந்தை, அஞ்சுமான் முஸ்லீம் கமிட்டியின் மாவட்ட நிர்வாகி ஹபீப் மியான் மற்றும் சிலருடன் சென்றான். அங்கு அவர்கள் அனைவரையும் முஸ்லிமாக மதம் மாறும்படியும், அவர்களது மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படியும் இல்லாவிட்டால் அச்சிறுமியை கடத்திச் செல்வதாகவும் மிரட்டினார். இதற்கு அந்த ஹிந்து குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதையடுத்து கடந்த 4ம் தேதி அந்த ஹிந்து குடும்பத்தினர் வீட்டுக்கு வந்த ஷாகித் அன்சாரி, அவரது உறவினர்கள் நண்பர்கள் அடங்கிய ஒரு கும்பல், அந்த சிறுமியை கடத்திச் சென்றது. மேலும், அவர்கள் வீட்டிலிருந்த சுமார் 3.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், 25,000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றையும் அபகரித்துச் சென்றது. இதுகுறித்து ஹிந்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், காவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து அந்த ஹிந்து குடும்பத்தினர், ஹிந்து அமைப்புகளின் உதவியை நாடினர். ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். சமீபத்தில், அந்த சிறுமி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு சென்று சிறுமியை மீட்டு வந்தனர். பின்னர் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த சிறுமியை கடத்திச் சென்ற அந்த முஸ்லிம் கும்பலை சேர்ந்தவர்கள், சிறுமியை வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்து ஷாகித் அன்சாரிக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து, ஷாகித் அன்சாரி, அர்பாஸ் அன்சாரி உள்ளிட்ட அந்த மதமாற்று கும்பலை காவல்துறையினர் கைது செய்து அனைவரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.