ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அர்ஜு மாலிக் என்ற முஸ்லிம் நபர் தன்னை ஹிந்துவாக அடையாளப்படுத்திக் கொண்டு 2021ல் பொகாரோ நகரில் சிறுமியுடன் நட்பு கொண்டார். பின்னர், அந்த பெண்ணை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொண்டார். இதைத் தொடர்ந்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அவர் அந்த சிறுமியை தனது நண்பர்களிடம் ஒப்படைத்தார். பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோவாக எடுத்துவைத்துக் கொண்டு அதனை பயன்படுத்தி சிறுமியை மிரட்டி, யாரிடமும் எதையும் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டியுள்ளார். உடல் மற்றும் மனரீதியான சித்ரவதைகளால் நொறுங்கிப்போன அந்த சிறுமி கடைசியாக அர்ஜு மாலிக் உட்பட 5 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அர்ஜு மல்லிக் தலைமறைவானார். அவரை காவல்துறை தேடி வருகிறது. இந்த சூழலில், பொகாரோவில் உள்ள காவல்துறை பதிவுகளின்படி, கூட்டு பலாத்காரம் உட்பட பல தீவிரமான வழக்குகளில் அர்ஜூ மல்லிக் ஒரு தேடப்படும் குற்றவாளி என தெரியவந்துள்ளது. அர்ஜு, தான் கட்டிய பங்களாவில் இருந்து நகரில் நடத்தப்பட்ட பல குற்றங்களை நிர்வகித்து வந்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், அவரது பங்களாவை காவல்துறை இடித்துத் தள்ளியது.