ஆஸ் முகமது என்ற முஸ்லிம் இளைஞன், தன்னை ராணுவ வீரர் ஆஷு ராணா என கூறிக்கொண்டு ஒரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவியுடன் தனது மத அடையாளத்தை மறைத்து நட்பை வளர்த்துக்கொண்டார். அவர்கள் நண்பர்களாகி பின்னர் தங்கள் மொபைல் எண்களையும் பரிமாறிக்கொண்டனர். இருவரும் டெல்லியின் ஜி.டி.பி நகரில் நான்கைந்து முறை சந்தித்தனர். ஆனால் அவர்களின் நட்பைப் பற்றி சிறுமியின் தாயார் அந்த நபர் குறித்து விசாரித்து அவரது பெயர் ஆஸ் முகமது என்ற உண்மையைக் கண்டுபிடித்தார். இதைஅ அறிந்த அந்த சிறுமியும் ஆஸ் முகமதுவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த முஸ்லிம் நபர், அந்த சிறுமியின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை உருவாக்கி, அவரது புகைப்படத்துடன் மோசமான செய்திகளை வெளியிட்டார். அந்த சிறுமியின் நண்பர்கள், உறவினர்கள், ஆசிரியர்களை துன்புறுத்தத் தொடங்கினார். சிறுமியுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து பணம் பறிக்க முயன்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, டெல்லி சைபர் காவல் நிலையத்தில் இந்த லவ் ஜிஹாத் குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து ஆஸ் முகமது கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து அலைபேசி, இரண்டு சிம் கார்டுகள் மீட்கப்பட்டன. காவல்துறை விசாரணையில், உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஸ் முகமது. அவர், மும்பையில் உள்ள கலினா கான்ட் என்ற இடத்தில் இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஆஸ் முகமது சமையல்காரராக பணியாற்றி வந்தார் என தெரிந்தது. அவரது முந்தைய வரலாறுகள் சரிபார்க்கப்பட்டு வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.