துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி பல்லாயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்ததாகவுக் தகவல்கள் வெளியாகி வருகின்றன. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு அனைத்து வகையிலும் பாரதம் உதவும் என பிரதமர் மோடி உடனடியாக அறிவித்தார். அவ்வகையில் முதல்கட்டமாக, மீட்பு பணியில் உதவும் வகையில் 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவையும் மோப்ப நாய் படையையும் மத்திய அரசு துருக்கிக்கு அனுப்பியுள்ளது. உத்தரப் பிரதேசம், காசியாபாத்தில் இருந்து விமானம் மூலம் இந்த பேரிடர் மீட்பு குழுவினர் துருக்கி சென்றனர். புறப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துப் பொருட்கள், நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட பிற உதவிகளையும் வழங்க மத்திய அரசு ஏற்பாடுகளை வேகமாக செய்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான உள்துறை, பாதுகாப்புத்துறை, சுகாதாரத்துறை, விமான போக்குவரத்து துறை உயரதிகாரிகள் கலந்துக்கொண்ட உயர்மட்ட கூட்டத்தில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.