இடைநீக்கம் செய்யப்பட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ டி.ராஜா சிங்குக்கு எதிராக தெலுங்கானாவில் நட்த்தப்பட்ட பேரணியில், ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களை கொலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பியதற்காக கலீம் உதீன் என்ற முஸ்லிம் அடிப்படைவாதி நபரை தெலுங்கானா காவல்துறை கைது செய்தது. அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 153, 295(ஏ), மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக நல்கொண்டா காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். இந்த எதிர்ப்பு பேரணி குறித்த வீடியோவில் கலீம் உதின், அவர்களை துண்டு துண்டாக வெட்டு என்ற கோஷத்தை எழுப்பினார். அதற்கு அந்த கூட்டத்தினர், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களை துண்டு துண்டாக வெட்டு என்று முழக்கம் எழுப்பினர். மேலும் கூட்டத்தில், “நமக்கு என்ன வேண்டும்? நபியை நிந்தனை செய்பவரின் தலை வேண்டும்” என்று மற்றொரு முழக்கமும் எழுப்பப்பட்டது. இதனிடையே, ‘சர்தான் சே ஜூடா’ என தலையை துண்டிக்கும் கோஷங்களை எழுப்பிய 90க்கும் மேற்பட்ட முஸ்லிம் அடிப்படைவாதிகளை ஹைதராபாத் காவல்துறை விடுவித்துள்ளது. ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியின் வழிகாட்டுதலின் பேரில் இஸ்லாமியர்கள் விடுவிக்கப்பட்டதாக டைம்ஸ் நவ் நவ்பாரத் அறிக்கை கூறுகிறது.