மனத்தின் குரலில் சில துளிகள்

பிரதமர் நரேந்திர மோடியின் மனத்தின் குரல் நிகழ்ச்சியில் பேசியவற்றில் சில துளிகள்:

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட மக்கள் இயற்கையை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தூத்துக்குடியில் சிறிய தீவுகள், திட்டுகள், கடலில் மூழ்காமல் இருக்க பனை மரங்களை நடுகிறார்கள். புயல், சூறாவளியிலும் நிமிர்ந்து நின்று நிலத்திற்கு பாதுகாப்பாக இருக்கின்றன பனைமரங்கள். நாம் இயற்கையை பாதுகாக்கும் போது இயற்கையும் நம்மை பாதுகாக்கும். இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டை தமிழக மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

உத்தர பிரதேசத்தின் ஜலான் என்ற இடத்தில் நூன் என அழைக்கப்படும் ஆறு இருந்தது. படிப்படியாக இந்த ஆறு அழிவின் விளிம்புக்கு சென்றது. இதனால் நெருக்கடிக்கு ஆளான அப்பகுதி விவசாயிகள், ‘ஜலான் மக்கள் நடப்பு ஆண்டு குழு’ அமைத்து நதிக்கு புத்துயிர் அளித்தனர். இது ‘அனைவரின் ஆதரவு இருந்தால் அனைவருக்குமான வளர்ச்சியை அடையலாம்’ என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

இன்று, பாரதத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மதிப்பை கொண்ட 70க்கும் அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. பல பாரதியர்கள் தங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறார்கள்.

மனதின் குரல் என்ற நம்முடைய குடும்பம் தொடர்ந்து பெருகி வருகிறது, மனங்களாலும், நோக்கத்தாலும் இணைந்து வருகின்றார்கள். நம்முடைய ஆழமான உறவுகள், நமக்குள்ளே ஆக்கப்பூர்வமான பிரவாகத்தைத் தொடர்ந்து பெருக்கெடுக்கச் செய்து வருகிறது.

டிசம்பர் மாதத்தில் கடற்படை தினம், ராணுவப் படைகளின் கொடிநாள் கொண்டாடப்படுகிறது. 1971ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற போரின் பொன்விழாவினை இந்த ஆண்டு தேசம் கொண்டாடுகிறது. சுதந்திரத்தில் நம்முடைய பழங்குடியினத்தவரின் பங்களிப்பை போற்றும் விதமாக, நமது தேசம் பழங்குடியின கௌரவ வாரத்தையும் கொண்டாடியது.

ஓ.என்.ஜி.சி இப்பொது, எண்ணைக் கிணறுகளைக் காண்பதற்கு, மாணவர்களுக்கான கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஹிமாச்சல பிரதேசத்தின் ஊனாவின் மினியேச்சர் ரைட்டரான ராம் குமார் ஜோஷி, சிறிய தபால் தலைகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், முன்னாள் பிரதமர் லால் பஹதுர் சாஸ்திரியின் வித்தியாசமான வரிவடிவத்தை உருவாக்கி இருக்கிறார்.

விருந்தாவனத்தின் மகிமையை, நாமனைவரும், நம்முடைய திறன்களுக்கேற்ப உரைக்கிறோம், ஆனால் விருந்தாவனத்தின் சுகம் இருக்கிறதே, இங்கே இருக்கும் ஆனந்தம் இருக்கிறதே, இதற்கு முடிவே இல்லை. இதை யாராலும் முழுமையாகப் பெற முடியாது, இது எல்லையே இல்லாதது.