பண்பாட்டை வளர்க்கும் பண்டிகை

இந்து அன்னையர் முன்னணி மற்றும் தர்மஜாக்ரன் அமைப்பு இணைந்து நடத்திய நவராத்திரி பூஜை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொலு வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக வீடுகள், வித்யாபாரதி, பி.எஸ்.எஸ் நடத்தும் கல்வி பண்பாட்டு மையங்களில் மாணவர்கள் கொலு வைத்து நவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாடினர். அனைத்து பூஜையிலும் குங்கும அர்ச்சனை ,விளக்கு பூஜை மற்றும் கன்யா வந்தனம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜையின் சிறப்பு அம்சமாக, பெண்குழந்தைகளுக்கு ஆண் பிள்ளைகள் பாத பூஜை செய்து, அர்ச்சனை செய்து அவர்களிடம் ஆசிபெற்றனர். பெண்களை தெய்வமாக, சகோதரியாக பார்க்கும் மனப்பான்மை வளர வேண்டும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட இந்த பூஜை, பெற்றோரிடமும் பொதுமக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.