கட்டாய மதமாற்ற வழக்கு

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்தவர் கங்காதர். இவருக்கு ரகுமான் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அப்போது தனக்கு இருந்த பணப்பிரச்சினை இருப்பது பற்றி ரகுமானிடம் ஸ்ரீதர் தெரிவித்தார். பெங்களூரு பனசங்கரியில் உள்ள மசூதிக்கு ஸ்ரீதரை ரகுமான் அழைத்து சென்றார். அங்கு அஜிஷாப் என்பவரை ரகுமான் ஸ்ரீதருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு, ஸ்ரீதரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு, ஒரு வாரமாக வீட்டுக்குள் அடைத்து வைத்த அவர்கள் ஸ்ரீதருக்கு இருக்கும் பணப்பிரச்சினையை தீர்ப்பதாக கூறி, அவரை வலுக்கட்டாயமாக ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாற்றினர். ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறுவதற்காக கட்டாய சுன்னத் செய்தனர். கட்டாயப்படுத்தி மாட்டிறைச்சி சாப்பிட வைத்தனர். கைகளில் துப்பாக்கி கொடுத்து புகைப்படம் எடுத்தனர். இதில் 12 பேர் ஈடுபட்டனர் என ஸ்ரீதர் குற்றம் சாட்டினார். மேலும், வருடம்தோறும் 3 ஹிந்துக்களையாவது மதமாற்றம் செய்ய வேண்டும் இல்லையெனில் துப்பாக்கியுடன் உள்ள புகைப்படத்தை வைத்து போலி வழக்கில் சிக்கவைப்போம் என மிரட்டியதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக உப்பள்ளியில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது பெங்களூருவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.