வேலைக்காக நிலத்தை பறித்த வழக்கு

நில மோசடி தொடர்பான வழக்கில் பிகார், ஆர்ஜேடி தேசிய தலைவர் லாலு பிரசாத், அவரது குடும்பத்தினர் புதன்கிழமை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள். லாலு பிரசாத் 2004 முதல் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது, லாலு பிரசாத் குடும்பத்திற்கு கொடுக்கப் பட்ட நிலங்களுக்கு ஈடாக ரயில்வேயில் பணி நியமனம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தனது குற்றப்பத்திரிகையில், ரயில்வேயில் முறைகேடான நியமனங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், பணியமர்த்துவதற்காக  வழிகாட்டுதல்களை மீறியதாகவும் கூறியுள்ளது. லாலு பிரசாத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிலத்தை மிகக் குறைந்த விலையில் அதாவது சந்தை விலையில் ஐந்தில் ஒரு பங்கு வரை குறைத்து நேரடியாகவோ அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மூலமாகவோ வாங்கியிருக்கிறார்கள்.லாலு பிரசாத்தின் மனைவி ராப்ரி தேவி அவரது மகள் உட்பட 16 பேர் மீது 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது, பின்னர் அவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி கிடைத்தது. குற்றங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பினார். மும்பை, ஜபல்பூர், கொல்கத்தா, ஜெய்ப்பூர் மற்றும் ஹாஜிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ரயில்வேயின் வெவ்வேறு மண்டலங்களில் 2004 முதல் 2009 வரை பீகாரில் வசிப்பவர்கள் “குரூப்-டி” பதவிகளில் நியமிக்கப்பட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.