தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வந்தது. அதன் பின்னர் நீண்ட இழுபறிக்குப் பிறகு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு சட்டமானது. உடனடியாக அந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுத்து அதை அரசிதழில் தமிழக வெளியிட்டது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டத்திற்கு தடை விதிக்கக்கோரியும், அவரச வழக்காக விசாரிக்கக் கோரியும் முறையிடப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், நீதிபதி கலைமதி ஆகியோர் அமர்வு, மனுக்கள் நடைமுறைகள் முடிந்தால் வழக்கு நாளை பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது.