மாணவர்களுக்கு, வகுப்பறை கல்வி என்பது அவசியமானது தான் என்றாலும், அவை அனைத்தையும் கற்றுத் தந்துவிடாது. அது ஒரு அனுபவம் தானே தவிர, அதுவே எல்லாம் என்ற எண்ணம் கூடாது. இன்றைக்கு இருக்கும் போட்டி நிறைந்த உலகில், மதிப்பெண்களுக்கு தான் அனைவரும் முக்கியத்துவம் தருகின்றனர். இது கல்வியே அல்ல. மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் தராமல், சிறந்த மாணவர்களை உருவாக்குவதில், கல்வியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
மதிப்பெண்களை விட நிபுணத்துவம் பெற்ற மாணவர்களை உருவாக்குங்கள் என்று கல்வியாளர்களிடம் மோகன் பாகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் வகுப்பறை என்பது நிகழ் நேர அனுபவமாக இருக்கும். அதை எப்படி முன்னெடுத்துச் செல்கிறோம் என்பதே அடுத்தகட்டத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பை அளிக்கும்.
இன்றைய காலகட்டத்தில் போட்டி காரணமாக மதிப்பெண்களும் மதிப்பெண் சான்றிதழ்களும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறிவிட்டன. இதைச் செய்வது கல்வி அல்ல. நாம் நிபுணத்துவம் பெற்ற மாணவர்களைக் கல்வியின் வழியாக உருவாக்க வேண்டும்” என்று மோகன் பாகவத் தெரிவித்தார்.