பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதில் அவர் பேசியதாவது உலக அளவில் பொருளாதர வளர்ச்சியில் 50 சதவிதம் பிரிக்ஸ் நாட்டில் பங்கு. சர்வதேச அளவில் மந்த நிலை ஏற்பட்ட போது அதை மீட்டதில் பிரிக்ஸ் நாட்டின் பங்கு மிக முக்கியமனது. பிரிக்ஸ் அமைப்பு தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்தும் இந்த அமைப்பு சரியான பாதையில் செல்கிறது. எனவே பிரிக்ஸ் நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்து இந்தியாவில் பொருளாதாரத்தை வரும் 2024ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக (ரூ350 லட்சம் கோடி) மாற்ற உதவிட வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார்.
இந்தியாவில் தொழில் செய்ய அளவில்லா வாய்ப்புகள் உள்ளன. இதனை பயன்படுத்தி பிரிக்ஸ் நாடுகளின் தொழில்துறை தலைவர்கள் இந்தியாவில் முதலிடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுகிறேன், என்று கூறினார்.