காரப்பனுக்கு வலுக்கிறது எதிர்ப்பு

கோவை, மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகையை சேர்ந்தவர் காரப்பன். துணிக்கடை உரிமையாளரான இவர், கோவையில் செப்டம்பர் 29ல் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பில் நடந்த அறிவுத்தேடல் கருத்தரங்கில், கிருஷ்ணர் மற்றும் அத்திவரதர் குறித்து அவதூறாக பேசியுள்ளார். இவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், காரப்பனை கண்டித்து பாஜகவினர் சிறுமுகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2ம் நாளாக இந்து முன்னணியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்துக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்திபேசிய காரப்பனை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாளாக வெள்ளியன்றும் காரப்பனை கண்டித்து சிறுமுகை நால்ரோட்டில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. காரப்பன் மீது புகார் கொடுத்தபோதும், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடிப்பதாகவும், உடனே அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

 

காரப்பனின் வாய்க்கொழுப்பு பேச்சு

கோவையில் நடந்த திராவிடர் இயக்க நிகழ்ச்சியில் காரப்பன் பேசியதாவது:இன்ஜினியரிங் படிப்பில் மகாபாரதத்தை வைத்துள்ளனர். இன்ஜினியரிங் படித்தால் வேலையா கிடைக்கப் போகிறது என்பதால் மகாபாரதத்தை பாடமாக வைத்துள்ளனர். பாஞ்சாலிக்கு சேலை கட்டிய கிருஷ்ணர் எந்த தறியில் அந்த சேலையை நெய்தார்? அவன் ஒரு பொம்பள பொறுக்கி… நெய்தால்தானே சேலை கிடைக்கும்.

ஆற்றிலுள்ள மணலை எண்ணினாலும் எண்ணலாம். கிருஷ்ணரின் மனைவிகளை எண்ண முடியாது. இதையெல்லாம் ஆவென்று மக்கள் கேட்கின்றனர்.சமீபத்தில் ஒரு பரதேசி அத்திவரதர் என்று… 48 நாட்கள் காஞ்சிபுரத்தில் உள்ள நெசவாளர் களின் வாழ்க்கையே நாசமாகி விட்டது.இவ்வாறு இந்து கடவுள்களை இழிவாக காரப்பன் பேசியுள்ளார்.