கட்டுடல் வேணுமா ஒரு கட்டுக் கட்ட வேணுமா

 

நீரிழிவு நோயாளார்கள் எடுத்து கொள்ள வேண்டிய உணவு

காலை

6:00 – வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் தேன், அரைமூடி எலுமிச்சை சாறு சேர்த்து மெதுவாக ஸ்பூனில் எடுத்து குடிக்க வேண்டும்.

6:30 – இரவில் வெந்தயத்தை ஊறவைத்து அதன் தண்ணீரை குடிக்கவும்.

7:00 – இரண்டு கோவைக்காய் ஒரு சிறிய நூல்கோல் சேர்த்து அரைத்த சாறு.

7:30 – ஒரு கைப்பிடி புதினா ஒரு கைப்பிடி கொத்துமல்லி சேர்த்து அரைத்த சாறு

8:00 – இரண்டு அல்லது மூன்று பெரிய வில்லைகள் வெங்காயத்தை அப்படியே உண்ணலாம் அல்லது அரைத்து குடிக்கலாம்.

8:30 – காலை உணவு சமைக்காமல் அப்படியே உண்ணும் வெள்ளரி, கேரட் போன்ற காய்கறிகள் அல்லது பழங்கள். (இவற்றை வயிறு நிறையும் அளவு உண்ணலாம், மதிய உணவுவரை அவ்வப்போது பசிக்கும்போது எல்லாம் எடுத்து கொள்ளலாம்).

மதியம்:

சந்தோஷப்படுங்கள் நமக்கு இதில் கண்டிப்பாக அரிசி சாதம் உண்டு!!!
புதிய வெந்தயக் கீரை ஒரு கைப்பிடி பச்சையாக அல்லது மிக லேசாக வேகவைத்து முதல் கவள சாதத்துடன் எடுத்துகொள்ள வேண்டும். பிறகு சாம்பார், கூட்டு, ரசம், மோர் எல்லாம் உங்கள் இஷ்டம்போல வெளுத்துகட்டுங்கள். அசைவம், வறுத்தது, பொரித்தது எல்லாம் வேண்டாம், மெதுவாக ரசித்து ருசித்து மென்று சாப்பிட மறக்க வேண்டாம்.

 

இரவு:

ராகி, சோளம், கம்பு, சாமை, வரகு, தினை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களில் செய்த மசாலா இல்லாத உணவுகள் அல்லது அவல் சாதம் (அவலை கொண்டு பாயாசம் முதல் பிரியாணி வரை அடுப்பில் ஏற்றாமலே அற்புதமாக சுவையாக செய்யலாம்.) உதாரணமாக ஊறவைத்து அதில் தேங்காய் துருவி போட்டால் தேங்காய் சாதம், எலுமிச்சையை பிழிந்தால் எலுமிச்சை சாதம் என ஒரு குழந்தைகூட இதை எளிதாக தயாரிக்கலாம்).
தூங்கச் செல்லும்முன் கால் கிளாஸ் பாலில் முக்கால் கிளாஸ் தண்ணீர், சிறிது மஞ்சள்தூள், ஒன்றிரண்டாக உடைத்த 5 மிளகுகள், பொடியாக நறுக்கிய பூண்டு 4 சேர்த்து வேகவைத்து குடிக்கவேண்டும். உள்ளங்கால்கள் மற்றும் தொப்புளில் ஒருதுளி ஆமணக்கெண்னை வைத்துகொள்வதும் நல்லது.