பாரதத் மாதா கீ ஜே” என்று சொல்ல மறுக்கும் ஒரு கூட்டம் பாரத தேசத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் இவர்களது முன்னோர்கள் மாறிய மதம் தோன்றுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றிய வேதங்களில் நமது நாட்டைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று நமக்கும் நமது குழந்தைகளுக்கும் கட்டாயமாகத் தெரிய வேண்டும்.
சத்தியம், பொருட் செல்வம், நீதி, படை பலம், செயல் திறன், கடின உழைப்பு, அறிவு, பரஸ்பர மரியாதை, ஒற்றுமை, தரும சிந்தை இவையே நாட்டை நிலைக்கச் செய்வன. அத்தகைய தாய் நாட்டு முன்னேற்றத்திற்கு வாய்ப்பளிக்கட்டும்”.
இந்தப் பாடலோடு பிருதிவீ சூக்தம் (அதர்வ வேதம்) தொடங்குகிறது. இதன் மையக் கருத்து, இதன் உயிர், 12ஆம் பாடலில் வருகிறது. ‘மாதாபூமி. புத்ரோஹம் பிரதிவ்யாஹ’. பூமியே என் தாய். நான் உனது சேய் என்பது பாடல். வந்தே மாதரத்தின் வேர் இப்பாடலில் உள்ளது.
இன்னரும் பொழில்களும், இணையிலா வளங்களும் உன்னத மலைகளும் ஒளிர் தரும் நாட்டை ரிஷி பாடுகிறார். இங்குள்ள வன விலங்குகள், பிணி தீர்க்கும் மூலிகைகள், அனைத்தையும் பாடும் வேதரிஷி நாட்டை நன்கு காக்கும் அரசன், உணவளிக்கும் உழவர், கோட்டைகள், குடில்கள், மாளிகைகள், மக்கள் சபைகள், சமிதிகள் அனைத்தையும் புகழ்ந்து பாடுகிறார்.
கிராமங்களிலும், காடுகளிலும் சபைகளிலும் சமிதிகளிலும், போர்க் களங்களிலும் நாங்கள் உன் புகழ் பாடுவோம்” என்று எங்கும் எக்காலத்திலும் தாய் நாட்டை மறக்காமல் வாழ்த்தி வணங்குவோம் என்கிறார் ரிஷி.
பாரத நாட்டின் ஒருமைப்பாடு குறித்து பேசுகிறது 45வது பாடல். வேறு வேறு மொழிகளைப் பேசுவோர், வேறு வேறு சமய தர்மங்களைப் பின் பற்றுவோர் ஆகிய அனைவரையும் ஒன்றாக, வேற்றுமை கருதாது எனது நாடு பால் தரும் பசுவைப் போல ஆயிரம் வளங்களை அனைவருக்கும் அள்ளிக் கொடுப்பாளாக” காணுகின்ற வேற்றுமைகளுக்கு நடுவே உள்ள அதிசயமான ஒற்றுமையை அன்றே பாடினார் வேதரிஷி. ஜனனீ ஜன்ம பூமிஸ்ச ஸ்வர்காதபி” என்ற புத்துணர்வூட்டும் வரிகளைத் தந்தவர்கள் நமது ரிஷிகள். அதை அப்படியே அற்புதத் தமிழில் பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்று பாரதியார் நமக்குத் தந்திருக்கிறார்.
(இர்ஃபன் ஹபீப் என்ற ‘பிரபல வரலாற்றாசிரியர்’, பாரதத்தை தாயாக கருதுவது பண்டைய பாரதத்தில் இல்லை. ஐரோப்பாவிலிருந்து வந்த கருத்து அது” என்று ‘த ஹிந்து’வுக்கு பேட்டி கொடுக்கிறார். அந்த அப்பட்டமான பொய்யை அம்பலப்படுத்தும் இந்தக் கட்டுரையை எழுதியவர்
மு. ஸ்ரீனிவாசன். வாசகர் கோட்டூர்புரம் பி.எஸ். சந்திரசேகர் உள்ளிட்டோர் அந்த பேட்டியைப் படித்துவிட்டு உண்மையை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆதங்கப்பட்டார்கள். அவர்கள் அனைவருக்காகவும் இந்தக் கட்டுரை.)