தான் வளர்த்துவிட்ட பயங்கரவாதம் தன்னையே பதம் பார்ப்பதை எதிர்க்கமுடியாமல் விழிக்கும் பாக்கிஸ்தான்!!!
முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய எம்.பி-யுமான கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாக்கிஸ்தானில் இலங்கை வீரர்களுக்கு தரப்படும் பாதுகாப்பை விமர்சித்துள்ளார்.
கராச்சியில் விளையாட இலங்கை அணி ஒப்புக் கொண்டதால் சர்வதேச கிரிக்கெட் நடத்தும் வாய்ப்பு பல காலங்கள் கழித்து பாகிஸ்தானுக்கு கிடைத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இலங்கை அணி வீரர்களுக்கு மிக அதிகமான அலவில் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்திருந்தது, இப்போது இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது அதில் வீரர்களுக்கு ஜனாதிபதிக்கு இணையான அளவிலான பாதுகாப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
இது சம்பந்தமாக கவுதம் கம்பீர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் திங்களன்று இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக கராச்சியில் உள்ள தேசிய மைதானத்திற்கு சென்று கொண்டிருந்தபோது இலங்கை அணிக்காக 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பிற்காக வந்தன, எதிர்புற சாலையிலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பாகிஸ்தானில் வைரலாகிவிட்ட இந்த வீடியோவில், டீம் பஸ்ஸின் பாதுகாப்பு பற்றி இரண்டு ஆண்கள் கேலி செய்வதைக் கேட்க முடிகிறது. சாலையின் மறுபுறத்தில் போக்குவரத்து நடமாட்டம் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு வாகனங்கள் நகர்வதைக் காணும்போது அவர்கள் இதை “ஊரடங்கு உத்தரவு போன்ற” நிலை என்று வர்ணிக்கின்றனர்.
முன்னதாக கடந்த 2009 ஆம் ஆண்டில் இலங்கை அணி பேருந்து லாகூரில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதில், எட்டு பேர் கொல்லப்பட்டனர் மேலும் பல வீரர்கள் காயமடைந்தனர், இதனை தொடர்ந்து உலகின் முக்கிய கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானில் விளையாடுவதை தவிர்த்தன என்பது குறிப்பிடத்தக்கது.