ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச் சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதி காரிகள் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த விசாரணையின் போது அவரிடம் 20 முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டன.
1. வெளிநாடுகளில் உள்ள உங்கள் சொத்துகள் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கிறது?
2. பிரிட்டன், ஸ்பெயின், மலேசியா வில் சொத்துகளை வாங்க எங்கிருந்து பணம் கிடைத்தது?
3. ஸ்பெயினில் பார்சிலோனா டென்னிஸ் கிளப் வாங்க எங்கிருந்து பணம் வந்தது?
4. பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் இருந்து கார்த்தி சிதம்பரம் அல்லது உங்களுக்கு எந்த வகையில் பணம் கிடைத்தது?
5. ஐ.என்.எக்ஸ். மீடியா பேரத்தில் கிடைத்த லஞ்ச பணத்தை நீங் கள் அல்லது கார்த்தி சிதம்பரம் எதில் முதலீடு செய்தீர்கள்?
6. வெளிநாடுகளில் உள்ள உங் களது போலி நிறுவனங்கள் குறித்து ஆதாரங்கள் கிடைத் துள்ளன. இது குறித்து உங்கள் பதில் என்ன?
7. உங்களுக்கு அல்லது கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமாக எத்தனை போலி நிறுவனங்கள் உள்ளன?
8. எந்தெந்த தொழில்கள் அல்லது எந்தெந்த துறைகளில் உங்கள் போலி நிறுவனங்கள் செயல்படுகின்றன?
9. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத் தில் மொரீஷியஸை சேர்ந்த 3 நிறுவனங்கள் ரூ.305 கோடியை முதலீடு செய்துள்ளன. இது குறித்து உங்கள் பதில் என்ன?
10. அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளில் உங்கள் மகன் கார்த்தி சிதம்பரம் தலையிட்டாரா?
11. ஐ.என்.எக்ஸ். மீடியா விவ காரத்தில் வெளிநாட்டு முதலீடு விதிகளை மீற உங்கள் மகனை அனுமதித்தது எப்படி?
12. வடக்கு பிளாக்கில் இந்திராணி முகர்ஜியை சந்தித்தது ஏன்?
13. கார்த்தி சிதம்பரத்துடன் தொடர் பில் இருக்குமாறு இந்திராணி முகர்ஜியை கேட்டுக் கொண்டீர் களா?
14. இந்திராணி முகர்ஜியின் கணவர் பீட்டர் முகர்ஜியையும் நீங்கள் சந்தித்தீர்களா?
15. ஐஎன்எக்ஸ் மீடியா வெளிநாட்டு முதலீட்டைப் பெற உங்கள் சார்பில் அனுமதி அளித்த அதி காரிகள் யார்?
16. நோட்டீஸ் அனுப்பியும் விசா ரணைக்கு ஆஜராகாதது ஏன்?
17. டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை முன் ஜாமீனை தள்ளுபடி செய்த பிறகு நீங்கள் எங்கு இருந்தீர்கள்? யாரை சந்தித்தீர்கள்? எந்த இடத்தில் சந்தித்தீர்கள்?
18. உங்களது மொபைல் எண் அணைக்கப்பட்டிருந்தது. அப்போது எந்த மொபைல் எண்ணை பயன்படுத்தினீர்கள்?
19. உச்ச நீதிமன்றத்தில் இருந்து திரும்பும் வழியில் உங்கள் ஓட்டுநரை வழியில் விட்டுவிட்டு எங்கு சென்றீர்கள்?
20. சிபிஐ நோட்டீஸ் ஒட்டிய பிறகும் ஆஜராகாதது ஏன்?