ஊடுருவல்காரர்களை விரட்டுவதே தலையாய கடமை

ஹிந்துக்கள் ஜனத்தொகை 1951க்கும் − 2011க்கும் இடையே, 84.1 சதவீதத்திலிருந்து 79.8 சதவீதமாக குறைந்து விட்டது. ஆனால், இதே காலகட்டத்தில் முஸ்லிம்களின் ஜனத்தொகை 9.8 சதவீதத்திலிருந்து 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால்தான், ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பதையும், முஸ்லிம்களின் எண்ணிக்கை திடுக்கிட வைக்கும் வகையில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
சட்டவிரோதமாக குடியேறிவர்களை பாரதத்திலிருந்து வெளியேற்றுவோம். இதற்காக குழு அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி அறிவித்தார். இதற்கு மத்திய அமைச்சரவை 2025ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11ம் தேதி ஒப்புதல் அளித்தது. நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நவ்லேஹர் (ஓய்வு), இக்குழுவின் தலைவர் ஆவார்.
பங்களாதேஷ், மியான்மர், பாகிஸ்தானிலிருந்து ஊடுருவல்காரர்கள் சட்டவிரோதமாக பாரதத்துக்குள் நுழைந்து விடுகிறார்கள். இப்போது இது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. அஸ்ஸாம், மேற்குவங்காளம், வடகிழக்கு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களான ஜம்மு − காஷ்மீர், லடாக் ஆகியவற்றிலும் இதன் தாக்கத்தை பார்க்கலாம். ஊடுருவல்காரர்கள், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கும் ஊடுருவி விட்டனர். இவர்கள் மதமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அப்பாவிகளை ஏமாற்றி, பணம் தருவதாக, வேலை தருவதாக பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மதமாற்றம் செய்கிறார்கள்.
1997ம் ஆண்டு, பாரதத்தில் ஒரு கோடி பங்களாதேஷிகள் உள்ளனர் என்று அப்போதைய உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா தெரிவித்தார். 2004ல், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, பாரதத்தில் 1.2 கோடி பங்களாதேஷிகள் உள்ளனர் என்று அப்போதைய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். பாரதத்தில் 2 கோடி பங்களாதேஷிகள் உள்ளனர் என்று 2016ம் ஆண்டு, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு தெரிவித்தார்.
ஹிந்துக்களின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் ஹிந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் முஸ்லிம் ஜனத்தொகை இளமையாகவே உள்ளது.
முஸ்லிம்கள் எங்கு சென்றாலும், அவர்களது கை வரிசையை காட்டாமல் இருப்பதில்லை. ஆசியாவாக இருந்தாலும் சரி, ஆப்ரிக்காவாக இருந்தாலும் சரி அவர்களது அட்டூழியங்களுக்கு வரைமுறையே கிடையாது. சுவீடனில் உள்ள மால்மோ நகரில், முஸ்லிம்களின் ஜனத்தொகை படிபடியாக அதிகரித்து விட்டது. அவர்கள் தங்களது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டார்கள். இங்கிலாந்தில் உள்ள லண்டனிலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் முஸ்லிம்கள் கொத்துக் கொத்தாக குடியேறினார்கள். உள்ளூர் மக்களுக்கு பெரும் இடையூறாக உருவெடுத்தார்கள். இந்தப் பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் தங்கள் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொண்டார்கள். இதே நிலை பாரதத்துக்கு ஏற்படக்கூடாது. விழிப்புணர்வுடன் செயல்பட்டு ஊடுருவல்காரர்களை விரட்டியடிக்க வேண்டும்.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி