நீதிபதியைக் குறிவைக்க புத்தக ஆயுதம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முருக பக்தர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில், “கீழைக்காற்று பதிப்பகம்” சென்னையில் நடைபெறும் 49வது புத்தகக் கண்காட்சியில் “திருப்பரங்குன்றம் விவகாரம்: ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதியா? ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?” என்ற தலைப்பில், புத்தகம் ஒன்றை வெளியிடுவதாக அறிவித்தது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம்.

ஸ்ரீவாஸ்தவாவும், நீதிபதி வேல்முருகனும் “நீதித் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வார்த்தைகள் பயன்படுத்தும் புத்தகத்தை விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது” என தமிழக அரசை கண்டித்ததுடன், அந்த சர்ச்சைக்குரிய புத்தகத்தை பறிமுதல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.