ஏப்ரல் 22 அன்று காஷ்மீர் பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிக்கும் துயரமான சம்பவம் என்பதில் சிறிதளவு கூட சந்தேகம் இல்லை. ஆனால் இது ஒன்றும் புதிது அல்ல. காஷ்மீரில் இதுபோன்ற தாக்குதல்கள் கடந்த 30 ஆண்டுகளாக நடந்தவாறு உள்ளன. இம்மாதிரியான இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதலை பாரதம் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வந்துள்ளது. இஸ்லாம் தோன்றிய நாள் தொடங்கி இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் மீது இம்மாதிரியான தாக்குதலைத் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருக்கின்றனர்.
கடந்த நூற்றாண்டின் 90 களிலிருந்து பாகிஸ்தானின் திட்டப்படி காஷ்மீரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் உள்ளூர் அரசியல்வாதிகளின் அரவணைப்புடன் ஹிந்துக்கள் மீது தாக்குதல்கள் நடத்தி, கொலைகள் செய்து அச்சுறுத்தி ?????????? ??????????? ?????????? அங்கிருந்த ஹிந்துக்கள் அனைவரையும் விரட்டியடித்து விட்டனர்.
பஹல்காமில் நடத்திய தாக்குதல்கள் போன்று உலகின் பல நாடுகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இப்போது கூட நடத்திக் கொண்டும் இருக்கின்றனர். சில நிகழ்வுகள் மட்டும் நம் பார்வைக்கு வருகின்றன. பல தாக்குதல்கள் பற்றி நமக்குத் தெரிவதே இல்லை.
பஹல்காமில் கூட ஒவ்வொருவரிடமும் அவர்களின் பெயர்களைக் கேட்டுள்ளனர். அடையாள அட்டையைப் பார்த்துள்ளனர். குரான் ஓதத் தெரியுமா கல்மா தெரியுமா என்றெல்லாம் கேட்டுள்ளனர். பின்னர் இஸ்லாமியர் அல்லாதவர்களைக் கண்டுபிடிக்க அவர்களின் ஆடைகளைக் களைந்து சுன்னத் செய்யப்பட்டுள்ளதா என்று பார்த்த பிறகு கல்மா படித்தவர்களையும், முஸ்லிம்களையும் விட்டுவிட்டு மற்ற 26 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். இதில் ஒருவர் நேபாள நாட்டவர்.
ஜிஹாதிகளுக்கு எல்லை எதுவும் கிடையாது. ஜிஹாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள்தான் நடக்கும் என்று சொல்லவும் முடியாது. உலகில் எந்த நாட்டிலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். பேருந்துகளில் ரயில்களில் விமானங்களில் என எங்கும் தாக்குதல் நடக்கும். பாமரனையும் கொலை செய்வார்கள் உயர் பதவியில் இருப்பவர்களையும் கொலை செய்வார்கள். இஸ்லாம் அல்லாத நாட்டிலும் நடக்கும். இஸ்லாமிய நாட்டிலும் நடக்கும். இந்த ஜிஹாதி பயங்கரவாதம் நாடு மொழி எல்லை கடந்து உலகு தழுவியது.
இஸ்லாமிய ஜிஹாதியினர்.
பாரதத்தில் ஹிந்துக்களைத் தாக்குகின்றனர்.
ஐரோப்பாவில் கிறிஸ்துவர்களைத் தாக்குகின்றனர்.
மியான்மரில் பௌத்தர்களைத் தாக்குகின்றனர்.
தாய்லாந்தில் பௌத்தர்களைத் தாக்குகின்றனர்.
ஸ்ரீலங்காவில் சிங்களவர்களைத் தாக்குகின்றனர்.
ஈரானில் சொராஷ்ட்ரர்களைத் தாக்குகின்றனர்.
ஈராக்கில் யகுதீஸ் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் ஷியா முஸ்லிம்களைத் தாக்குகின்றனர். ஷியாக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் சன்னி முஸ்லிம்களைத் தாக்குகின்றனர். இருவரும் சேர்ந்து அஹமதியா முஸ்லிம்களைத் தாக்குகின்றனர். மூவரும் சேர்ந்து கொண்டு ஹிந்துக்களைத் தாக்குகின்றனர்.
அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதும் இரவு நேரக் கேளிக்கை விடுதிகள் மீதும் தாக்குகின்றனர். உலகில் அனைவரோடும் மோதி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டிலுள்ள Foundation Pour L Innovation என்ற அமைப்பு அளித்துள்ள ஆய்வறிக்கையொன்றில் 1979 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டுவரை சர்வதேச அளவில் 66,872 தாக்குதல்கள் இஸ்லாமியர்களால் நடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 2,49,941 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளனர். வேறு எந்த ஒரு மத அமைப்பினரும் இவர்களுக்கு இணையாக இல்லை.
மேற்குறிப்பிட்ட படுகொலைகளில் (84.4%) 2013க்குப் பிறகு நடைபெற்றவை என்பது கவனத்திற்குரியது.
1979 முதல் 2000 வரை நடைபெற்ற 2,194 தாக்குதலிகளில் 6,817 பேர் மரணம்.
2001 முதல் 2012 வரை நடைபெற்ற 8,265 தாக்குதல்களில் 38,187 பேர் மரணம்.
2013 முதல் 2024 வரை நடைபெற்ற 56,413 தாக்குதல்களில் 2,04,937 பேர் மரணம். ஜிஹாதிகளால் நடத்தப்பட்ட மேற்கண்ட தாக்குதல்களில் 31.2%, படுகொலைகள் 33.7% பாரதம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளன.
மதசார்பற்ற வாதிகளும், இடதுசாரிகளும், தாராள மனப்பான்மை கொண்டவர்களும் இஸ்லாத்தின் பெயரால் நடைபெற்று வருகிற பயங்கரவாதச் செயல்களைக் கண்டிக்க முன்வருவதில்லை. மாறாக உண்மையைத் திரித்துக் கூறி பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பேசியும் எழுதியும் கருத்தரங்குகள் நடத்தியும் வருகின்றனர். இஸ்லாமிய பயங்கரவாதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டு இருப்பதுவே காரணமாகும்.
இஸ்லாமிய ஜிஹாதிகள் நடத்திடும் பயங்கரவாதச் செயல்களுக்கு குரானில் உள்ள 26 செய்யுள்கள் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள ஹதீஸ் விளக்கங்களும் முக்கிய காரணமாகும். மாற்று மதத்தினர் மீது வெறுப்புணர்வை வளர்க்கும் கருத்துக்கள் அடங்கிய பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அதுவே சிறுவர்கள் இளைஞர்கள் மனதில் பதிந்து பயங்கரவாதப் பாதைக்கு இட்டுச் செல்கிறது. அதனால்தான் மாற்று மதத்தினரை கொலை செய்வது, வழிபாட்டுத் தளங்களைத் தாக்குவதும் நடக்கிறது என்று அறிஞர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
ஷியா மத்திய வக்ப் வாரியத் தலைவர் வாஸீம் ரிஸ்வி 2024 ஆம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றிணைத் தொடர்ந்தார். வெறுப்புணர்வைத் தூண்டி மாற்று மதத்தினரைக் கொலை செய்வதை நியாயப்படுத்தும் 26 செய்யுள்களை குரானில் இருந்து அகற்றிட வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.
பயங்கரவாதிகள் அந்த ஆயத்துகளை சுட்டிக்காட்டி இளைஞர்களை மூளைச் சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி விடுகின்றனர். மாற்று மதத்தினரைக் கொலை செய்வதை ஊக்குவிக்கின்றனர். எனவே அவற்றை குரானில் இருந்து அகற்றிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
அல்லாஹ்வின் ஆணை என்றும் கட்டளை என்றும் சிறுவர்கள் இளைஞர்களின் தூய மனதில் பயங்கரவாதக் கருத்துகள் பதிக்கப்படுகின்றன. அதனால்தான் அவர்கள் மற்ற மதக் கருத்துகளை கேட்கவும் மதிக்கவும் மறுக்கின்றனர். வெறுப்புணர்வு தோன்றி கொலைகள் செய்கின்றனர் என்று வாதிட்டார்.
அவருடைய வழக்கைப் பற்றி தீர ஆழமாக விசாரணை செய்திடாத உச்ச நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ததுடன் ரிஸ்விக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதம் வேறு விதித்தது.
1985 ஆம் ஆண்டு சந்த்மால் சோப்ரா என்பவர் குரான் வன்முறைகளை போதிக்கிறது. மதங்களுக்கிடையே வெறுப்புணர்வை தோற்றுவித்து வன்முறையை ஆதரிக்கிறது எனவே அதைத் தடை செய்யவேண்டும் என்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் ஜிஹாதி பயங்கரவாதிகளையும் இஸ்ரேலும் சீனாவும் சரியான முறையில் கையாளுகின்றன.
மதரஸாக்கள் இருக்கும் வரை ஜிஹாதி பயங்கரவாதிகள் இருப்பர். எனவே மதரஸாக்களைக் கட்டுப்படுத்திட வேண்டும். பயங்கரவாதிகளை தண்டிப்பதுடன் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களை தண்டித்திட வேண்டும். அப்போது மட்டுமே பஹல்காம் போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும். கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்கினாள் எதிர்காலத்திலும் இம்மாதிரியான தாக்குதல்கள் தொடரவே வாய்ப்புகள் அதிகம்.
கட்டுரையாளர்: முன்னாள் ஆசிரியர், விஜயபாரதம்