பயங்கரவாத முற்றுகையில் தமிழகம்? கண்ணெதிரே கண்ணிவெடி

ஜனவரி 28 அன்று தமிழகத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் 20 இடங்களில் நடத்திய சோதனையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தமிழக தலைவன் அல்பாசித் புரசைவாக்கத்தில் பிடிபட்டான்.  இக்காமா தற்காப்பு பயிற்சி என்ற பெயரில் பயங்கரவாத செயலுக்கு இவன் பயிற்சி அளித்ததாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் (என்.ஐ.ஏ) தெரிவித்தார்கள்.  இவன்  ஆம்புலன்ஸ்  ஓட்டுநராக தங்கி இருந்துள்ளான்.

தமிழகத்தின் தலைநகரின் மையப்பகுதியில் கிளாபா பார்ட்டி ஆஃப் இந்தியா, கிளாபா பிரன்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரிலும்  பயிற்சி அளிக்கப்பட்டது பிடிபட்டவர்கள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பயங்கரவாதிகள் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

 ஜனவரி மாதம் மட்டும் திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வங்கதேச ஆட்கள் 98 பேரை என்.ஐ.ஏ வளைத்தது.

 கோவையில் 1998 பிப்ரவரி 13 அன்று குண்டு வெடிப்பு நடந்திருக்காது. ஜனவரி 30 அன்றே, தமிழக முதல்வருக்கு, கோவை போலீஸ் கமிஷனர்,  மோச
மான நிகழ்வு நடப்பதாற்கான அறிகுறிகள் தெரிகின்றன என கூறியும்,  அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடவில்லை.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே  குறிப்பாக திராவிட மாடல் ஆட்சியில், பயங்கரவாதிகளும், பங்களாதேஷ், மியான்மர் ரோஹிங்கியா முஸ்லிம்களும்  அதிக அளவில் ஊடுருவியுள்ளார்கள். கைது செய்யப்
படுபவர்கள், தமிழக காவல் துறையால் அல்ல, என்.ஐ.ஏ
யால் என்றால் வேறு என்ன பொருள்? தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தான விவகாரங்களில் தமிழக  காவல் துறைக்கு முட்டுக்கட்டை போடுவது யார்?

பயங்கரவாத வலைப் பின்னல்

தென்னிந்தியாவில் ஹிஸ்ப்- உத்- தஹ்ரீரின் பயங்கரவாத நடவடிக்கைகள் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு மாதம்முன்பே  வெளிச்சத்திற்கு வந்தன.  தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போதே அதாவது மே 2021-ல்  (இஸ்லாமிய கலிபா ஆட்சியை கொண்டு வருவதற்காக) ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்துவிட முயற்சி நடப்பதாக என்.ஐ.ஏ அமைப்பினர் தெரிவித்தார்கள். இதற்காக முஸ்லிம்களை தூண்டும் வகையில் செய்திகளை வெளியிட்டதற்காக இக்பால் என்பவனை அவர்கள் கைது செய்தார்கள் மதுரை காஜிமார் தெருவில் உள்ளவன் முகமது இக்பால். அது கூட தமிழக காவல்துறையினருக்கு தெரியாதாம்.

ஜஹாங்கீர் பிஸ்வாஸ் என்ற வங்க தேச ஆசாமி  8 ஆண்டுகளுக்கு முன் சட்டவிரோதமாக பாரதத்துக்கு வந்து சென்னையில் பதுங்கியிருந்து, சிவில் கான்ட்ராக்டராக நடமாடினான். என்.ஐ.ஏ ஜஹாங்கீர் நடமாட்டத்தை கண்காணித்து வந்தது. சிலருடன் இணைந்து பிஸ்வாஸ் சென்னையில் உள்ள கோயிலில் குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டான். கைது செய்யப்பட்டான். இன்று வரை “அந்த சிலர்” யார், எந்த அமைப்பு ஆட்கள் என்பதை கண்டுபிடிக்க தமிழக காவல் துறை முன்வரவில்லை.

எனவே, தஞ்சாவூர், மதுரை, ஈரோடு, சேலம் மாவட்டங்
களிலும்,  புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும்  என்.ஐ.ஏ தேடுதல் வேட்டை தொடர்ந்தது. கண்ணி வைத்ததில் ஜியாவூதீன் பக்கவி, பாவா பக்ருதீன் ஆகியோர்  2022 மார்ச்சில்  பிடிபட்டார்கள். முகநூல் மூலம் முஸ்லீம் இளைஞர்களை  மூலைச் சலவை செய்து வந்தவர்கள். “அந்த சிலர்” மர்மம் ஓரளவு துலங்கியது. அந்த அமைப்பு, ஹிஸ்புத்-உத்-தஹ்ரீர் என்பதும் புலனாயிற்று.

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவர் டாக்டர் ஹமீது உசேன், பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியர். அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசியராக பணியாற்றி உள்ளார். அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான். இவர்கள் மூவரும், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பான, தஹரீர் அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, மூவரிடமும் தொடர்பில் இருந்த, சென்னையை சேர்ந்த முகமது மவுரிஸ், காதர் நவாஸ் ஷெரிப், அகமது அலி உமரி, ஆகியோரும் பிடிபட்டனர். தற்போது விவகாரத்தை என்.ஐ.ஏ துருவுகிறது.

துருவியதில், ஹமீது உசேன், சென்னையில் மட்டுமல்ல,  பயங்கரவாத கொள்கை குறித்த பயிற்சி வகுப்புகளை கரூர் மற்றும் கன்னியாகுமரியில் நடத்தியது தெரிந்தது.  அதற்காக துவங்கப்பட்ட, ‘மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்’ அலுவலகத்திற்கு வந்து சென்றவர் விபரங்களையும் என்.ஐ.ஏ கண்டுபிடித்தது. இது எதுவும் தமிழக காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு தெரியவில்லையா, திராவிட மாடல்  அரசு  வாய்மொழியாக உளவுப் பிரிவுக்கு தடை விதித்துள்ளதா?

சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு உடனடி நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்
களுக்கு மத்திய அரசு 2022 நவம்பர் மாதமே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.    ஆனால்  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க தயக்கம்  காட்டுகிறது. கரணம்,  சில இஸ்லாமிய அமைப்புகளின்  ஆதரவு. வேறென்ன?

என்றும் அதே கதை

2022 பிப்ரவரி:  தஞ்சையிலும்  தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூரிலும் தஹ்ரீர்  ஆட்களுக்குக்கு ஆதரவாக முஸ்லிம்கள்  மறியலில் இறங்கினார்கள். தஞ்சாவூர் கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த அப்துல்காதர், முகமது யாசின்,  காவேரி நகரைச்  சேர்ந்த அகமது  ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகளை  முற்றுக்கையிட்டு முஸ்லிம்கள் ஆர்பாட்டத்தில்  ஈடுபட்டார்களே, என்ன சங்கதி?  மகா நோன்புச் சாவடியிலும்  என்.ஐ.ஏ அதிகாரிகளை எதிர்த்து  ஆர்பாட்டம் நடைபெற்றது.   ஆர்பாட்டத்தை கட்டுப்படுத்த மட்டுமே தமிழக காவல் துறையினர் வந்தார்கள். ஆனால்,  இன்று வரை தமிழக காவல்துறையினர்  பயங்கரவாத சம்பவ நடவடிக்கைகளை தடுக்க முறையான சோதனையில்  ஈடுபடவில்லை.

1997 பிப்ரவரி: தஞ்சாவூருக்கு அருகில் சாலியமங்கலத்தில் இருந்த முகமதியா ரைஸ் மில்லில் குண்டு வெடித்து இருவர் மாண்டார்கள். பலர் காயமடைந்தார்கள்.  இந்த ஆலையில் 84 ஜெலட்டின் குச்சிகள், 50 கிலோ சல்பர், 11.5 கிலோ அமோனியம் நைட்ரேட், 100 டெட்டனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன.   இந்த சம்பவத்தில் அரிசி ஆலை அதிபர் அப்துல் ஹமீதும் அவரது மகன் அப்துல் காதரும் படுகாயம். அப்துல் காதருக்குத் தமிழகத்தில் உள்ள பயங்கரவாத கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகப் பின்னாளில் குட்டு உடைந்தது.

மீண்டும் தொடர்கதை

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து  அதிக அளவில்  வங்க
தேசத்து ஆட்கள்,  போலி ஆவணங்களுடன்  தமிழகத்தில்  குடியேறி
யுள்ளவர்களில் பெரும்பாலோர் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் சென்னை ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் சேர்ந்து, வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்ற போர்வையில்   திரிகிறார்கள். ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட  மாவட்டங்களில் மட்டும் 50,000க்கும் மேற்பட்டவர்கள்   கட்டுமானத் தொழில், நகைக்கடைகள், பின்னலாடை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரிகிறார்
கள். மேற்கு வங்க மாநிலம்   வடக்கு 24 பர்கானாவில் உள்ள  7 வங்கி கணக்கு
களிலிருந்து மாதாமாதம் ரூ 1 கோடிக்கு  மேல்  வங்கதேசத்திற்கு போகிறது. இது திருப்பூர் வங்க தேச ஆட்கள் மூலமாகவே  நடக்கிறது.

தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய
வற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களில்,  சட்ட விரோதமாக நுழைந்த வங்கதேச ஆட்கள் ஊடுருவியது தெரியவந்தது.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட வங்கதேச ஆட்களில் ஒருவர் பாரதத்தில், 20 ஆண்டுகளாக இருப்பவராம். கோவை, திருப்பூர் பகுதிகளில் வேலை செய்தது தெரிந்தது. அவரிடம், இரு நாடுகளின் ஆவணம் இருந்தது!

“திருப்பூர் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களுக்கு ஒரு புகலிடமாக மாறிவிட்டதா?” என்ற தலைப்பில் 2018ல் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில்  வெளியான கட்டுரையில்  “300க்கும்  மேற்பட்ட வங்கதேச ஆட்கள் குடும்பம் குடும்பமாக தங்கியுள்ளார்கள்.   இவர்கள்  இவ்வாறு வருவதற்கு மூல காரணமாக இருந்தவர் குல்னா பகுதியிலிருந்து வந்த  முகமது பாபுல் ஹோசன்  என்பவர்தான்”. திருப்பூரில் செவ்வந்திபாளையத்தில் கடந்த 13 வருடங்களாக தொழில் செய்கிறாராம் அந்த ஆள். கட்டுரை சொல்கிறது.

வங்கதேச ஆட்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என  மத்திய அரசு  எச்சரித்ததாகவும், “சட்டவிரோதமாக குடியேறியவர்களில் பெரும்பாலோர் 20-35 வயதுக்குட்பட்ட. பயங்கரவாத சக்திகளால் மூளைச்சலவைக்கு ஆளானவர்கள் என்பதும் அந்த கட்டுரையில் காணப்படுகிறது.

பல்வேறு குற்ற வழக்குகளுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கை, நைஜீரியா, சீனா, ஈரான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளில் சிலர் சட்டவிரோதமான அந்தஸ்தைத் தவிர, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆதார் அட்டைகளைப் பெற்றுள்ளனர் என்று 2021 செப்டம்பர் மாதம் நடந்த ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.

தமிழகத்தின் சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களில் சுமார் 13,289 வெளிநாட்டினர் விசா காலத்தைக் கடந்து தங்கியுள்ளனர்.  அவர்களின் ஜாமீன் மனு நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் என்பதால் ஏற்கப்படவில்லை என்று நீதிபதி எம்.தண்டபாணி கூறினார். “அரசு இயந்திரம் மற்றும் சட்ட அமலாக்க ஏஜென்சியின் குறைபாடுகள் காரணமாக”, சட்டவிரோதமாக குடியேறிய சில மனுதாரர்கள், அவர்கள் பிறந்த நாட்டிற்கு நாடு கடத்தப்படாமல் பல தசாப்தங்களாக பாரதத்தில் உள்ளனர் என்றும் மேலும் காலப்போக்கில் பாரதத்தை வெளியார் கைப்பற்றும் சாத்தியம் உண்டு. இது சுதந்திரத்திற்கு முந்தைய சூழ்நிலைக்கு வழிவகுக்கும்” என்றும் அந்த நீதிபதி கூறினார்.

உயர் நீதிமன்றம் பல முறை சொல்லியும் திராவிட மாடல் அரசு காதில் ஏறவில்லை என்றால்…? ஆபத்துதான்

ஆதார் மையம் ஆபத்தின் ஆரம்பம்

கொல்கத்தாவில் இருந்து ரயில் மூலம் சென்னை வருகின்றனர். அங்கிருந்து திருப்பூர் வந்து அவர்கள் சொல்லி அனுப்பிய ஏஜன்ட் வாயிலாக பனியன் நிறுவனம் அல்லது நாட்டின் வட பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் தஞ்சமடைந்து விடுகின்றனர். சிலர் ஆவணங்களை திருப்பூர் வந்து எடுக்கின்றனர். அதற்கு சிலர் துணை போவதால், எளிதாக டாக்டர், பள்ளி தலைமையாசிரியர், நோட்டரி வக்கீலிடம் ஆவணங்களை தயார் செய்து விண்ணப்பித்து ஆதார் கார்டு, காஸ் இணைப்பு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்றவற்றை பெறுகின்றனர். இதற்காக, 5,000 முதல், 15,000 வரை செலவு செய்து நாட்டின் பிரஜையாக மாறி விடுகின்றனர்.

நான்கு மாதம் முன்பு திருப்பூரை அடுத்த அனுப்பர்பாளையத்தில் வங்கதேசத்தினர் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீஸ் விசாரித்த போது, பல்லடத்தைச் சேர்ந்த புரோக்கர் மாரிமுத்து என்பவர், வங்கதேசத்தினருக்கு அரசு டாக்டரிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பித்து திருப்பூர் மாநகராட்சியில் உள்ள மையத்தில் இருந்து ஆதார் பெற்றுக் கொடுத்தது தெரிந்தது.

2018ல், இதேபோன்று நல்லுாரில், பத்து வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டபோது பீஹாரைச் சேர்ந்த முன்னாள் ஆதார் மைய ஊழியர் ஒருவர் திருப்பூரில் தங்கி ஏராளமான போலி ஆதார் கார்டுகளை பெற்று கொடுத்தது தெரிந்தது. எனவே, ஆதார் மையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பை மேற்கொள்வதுடன், வடமாநிலத்தினர் ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, இணைக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும். செய்வார்களா?

நாட்டின் வட பகுதியினர் போர்வையில் தங்கியுள்ள வங்கதேசத்தினர் போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர். அவர்களை பிடிக்கும் வகையில், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற போக்குவரத்து உள்ள இடங்களில் போலீசார் கண்காணிக்க வேண்டும். செய்வார்களா?

கட்டுரையாளர் : எழுத்தாளர்