வல்லரசுகளை பின்தள்ளி பாரதத்தை முன்னேற்றும் திறன் மேம்பாட்டு திட்டம்

செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் உள்ளிட்ட எதிர்கால தொழில்துறைக்கு தேவையான மனித சக்திகள் உருவாக்கத்தில்  இந்தியா அமெரிக்காவுக்கு அடுத்து ஜப்பான், சீனா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளதாக பிரிட்டனை சேர்ந்த கியூஎஸ்(QS) ஆராய்ச்சி நிறுவனம் சமீபத்தில் கூறி இருந்தது. இது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் முன் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இந்தியா 28 வயதினர் அதிகம் நிரம்பிய இளையோர் தேசம்.

இங்கு 65 சதவீதம் பேர் 35 வயதுக்கு கீழானோர்.  உலகுக்கே மனித சக்தியை அளிக்க வல்ல தேசமுமாகும். ஆனால் தொழில்துறை தேவைக்கும் அதற்குப் பொருத்தமான  திறன் படைத்த தொழிலாளர்கள் கிடைப்பதற்கும் இடையேயான இடைவெளி மிகவும் அதிகம். காரணம் சுதந்திரத்துக்கு பின் நாட்டைப் பெரும்பாலான ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் கட்சி பின்பற்றிய மோசமான கல்விக் கொள்கைகளே.

2014ம் ஆண்டு மத்தியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதும்  நிலைமை மாறியது. ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, புதிய கல்விக் கொள்கை என்று வரிசை கட்டிய திட்டங்கள் நிலைமையை மாற்றியது. அமெரிக்க தொழிலதிபர் எலான்மஸ்க் நான் வேலை தருகிறேன் கல்வி முக்கியமல்ல வேலை தெரிந்திருந்தால் போதும்   என்று இன்று கூறுகிறார், ஆனால்  நரேந்திர மோடி கொண்டு வந்த ஸ்கில் இந்தியா நீங்கள் என்ன படித்திருந்தாலும்  பரவாயில்லை தொழில் துறைக்கு தேவையான  திறனை கற்றுக் தேருங்கள் உங்களுக்கு வேலை நிச்சயம்  என்று அன்றே முழங்கியது.

ஸ்கில் இந்தியா இரண்டு வாரம்  முதல், இரண்டு வருடம் வரை பல்வேறு கால அளவிலான திறன் பயிற்சிகளை வழங்குகிறது.  அதாவது தகவல் தொழில்நுட்பம்,  மருத்துவம், விவசாயம், தொழிற்சாலைகள் முதல் விமானம் வரை பல்வேறு துறைகளுக்கு தேவையான ஆயிரக்கணக்கான பயிற்சிகளும் இதில் அடக்கம்.

இதுவரை 1.5 கோடி பேர் திறன் பயிற்சிகளையும், 53 லட்சம் பேர் உயர்த்திறன் பயிற்சிகளையும்   பெற்றுள்ளனர்.  ஸ்டார்ட் ஆஃப் இந்தியா திட்டம் புதிய தொழில் முனைவோருக்கு தேவையான பயிற்சி களையும் நிதி ஆதாரத்தையும் வழங்குகிறது, புதிய கல்விக் கொள்கை பள்ளிக்கூடம் முதல்  பல்கலைக்கழகங்கள் வரை பாடத்திட்டத்தில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது மேலும் நாடு முழுவதிலும் புதிய 16 ஐ.டி.ஐ,    3000 தொழிற் பயிற்சி மையங்கள், 7 ஐஐடி, 15 ஏ.ஐ.ஐ.எம்.எஸ்,  390 புதிய பல்கலைக்கழகங்களையும் கொண்டு வந்துள்ளது.

இதைத்தான் கியூஎஸ்(QS) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஸ்வின் பெர்னாண்டஸ் கூறுகிறார் பிரதமர் மோடியின் திறன் மேம்பாட்டு திட்டங்களும் புதிய கல்விக் கொள்கை 2020 இந்தியாவை முதல்முறையாக பல உலக வல்லரசுகளையே பின்தள்ளி முன்னுக்கு கொண்டு வந்துள்ளது என்று.