இன்றைய அவசியம்: மன நலம் மேம்படுத்தும் அலுவலக குடும்ப தினம்

கார்ப்பரேட் குடும்ப தினம் என்கிற தத்துவம் இன்று  உலகம் முழுவதும் இயங்கும் பல அலுவலகங்களில் அனுசரிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள், வியாபாரிகள், போன்றோரு க்கு என்று எப்போதும் திறந்திருக்கும் அலுவலகக் கதவுகள் குறிப்பிட்ட அந்த நாளில் மட்டும் ஊழியர்களின் குடும்ப சங்கமத்திற்காக வரவேற்க காத்திருக்கும். பல்வேறு நிறுவனக் குழுக்களின் அனைத்து உறுப்பினர்களையும் குடும்பங்களோடு ஒன்று சேர்க்கும் தருணம் இது.

பன்னாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி அல்லது சிறிய குடும்ப நிறுவனமாக இருந்தாலும் சரி, ஊழியர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை அலுவலகத்திற்கு அழைத்து வந்து சிறப்பிப்பதை  ஆண்டு முழுவதும் நிறுவனம் கண்ட வியாபார செயல்பாடு முடிவுகளைக் கொண்டாடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.

  1. சக ஊழியர்கள் அன்றாட அலுவலக வழக்கத்தை விட ஒருவரையொருவர் இத்தருணங் களில் பரஸ்பரம் நன்கு புரிந்து கொள்கிறார்கள். புதிய நட்புகளை உருவாக்குவதற்கும் ஏற் கனவே உள்ள நட்பு / உறவுமுறைகளை ஆழப்படுத்து வதற்கும் கிடைத்த கிடைமட்ட” இணைப்புத் தான்(Horizontal connections) இந்த நாள்.
  2. விசுவாசத்தை உருவாக்குதல்: அலுவலகம் என்பது நமது வாழ்க்கையின் பெரும்பகுதியை நாம் செலவிடும் இடம். காலை முதல் மாலை வரை, பலரது நாட்கள் பணி மேசைகள், மூடிய அறைகளில் வாடிக்கையாளர்களுடன் மீட்டிங்குகள், கேன்டீனில் மதிய சாப்பாடு, மற்றும் கோப்புக்கள் பற்றிய பேச்சுக்கள் என்றே  நாட்கள் ஓடி விடுகின்றன. எனவே அலுவலக வாழ்க்கை இரண்டாவது குடும்பம் போலவே மாறிவிடுகிறது. அனைவரும் கூடிச் சிரித்துப் பேசி மனதில் உள்ளவற்றை பாடலாகவோ, இன்னிசைக் கருவிகள் மூலம் இசைப்பதில் மூலமாகவோ, உணவுப் பரிமாற்றத்தின் மூலமாகவோ    நிஜ வாழ்க்கை போல இந்தநாள் அமைவது எல்லோரும் வரவேற்கத்தக்கது தானே. அன்று பங்கேற்போர் அனைவர்க்கும் வித்தியாசமான ருசிகர உணவுப் பதார்த்தங்கள், குழந்தைகளுக்கு கை நிறைய வெகுமதிகள் போன்றவற்றை  வழங்க நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன.
  3. சில நேரங்களில், சிறந்த பணிச்சூழல் கூட பலருக்கு மன அழுத்தம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வித்தியாசமான நிறுவன – கு டும்ப தின நிகழ்ச்சிகள் இந்தப் பிரச்சினையை ஓரளவு தீர்க்கலாம். அதிரடி ஓவியம் வரைவது கூட ஒரு சிறந்த மன அழுத்த எதிர்ப்புச் செயலாகும்,  நமது  குழந்தைகளின் புகைப்படத்தை மேசையில் வைப்பது மட்டும் போதாது – குழந்தைகளே பணிச்சூழலுக்கு வருகை தந்தால், அந்த  இருப்பின் நினைவு அன்றாட மன அழுத்தத்தைக் கடக்க உதவும். அல்லவா ??!!

பரிந்துரைக்கப்படும் மேலும் சில   செயல்பாடுகள் :

பங்கேற்பாளர்கள் பிரபலமான ஒரு பாடலை “டப்பிங்” செய்யும் அசல் நடனக் கலையுடன் பாடி ஆடுவது, விக், ஒப்பனை சார் உடைகளுடன், சக ஊழியர்கள் வழக்கத்திலிருந்து வித்தியாசமாக தங்களை வெளிப்படுத்திக் கொள்வது,  இவற்றை பதிவு செய்த  நிகழ்ச்சி  வீடியோ  ஆகியவை பலரும் ஒன்றாகக் கழித்த ஒரு நல்ல நாளின் நினைவாக பல வருடங்களுக்கு இருக்கும். இவை பள்ளி பருவத்தையே மீண்டும் எட்டிவிட்டோமோ என்கிற மகிழ்ச்சியை கொடுக்கும்.

இப்போது உள ரீதியிலான தீர்வுகள் உடனடி அவசியம் என்று நிறுவனங்களும், கல்விக்கூடங்களும்  உணரத் தொடங்கிவிட்டன.  தனியார் வங்கிகள் மட்டுமின்றி பிரபல அரசு வங்கிகளும் இவை போன்ற நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டன.    