தமிழகத்திலிருந்து கும்பமேளாவிற்கு ரயில்!

இந்திய ரயில்வே நிறுவனமான ஐஆர்சிடிசி (IRCTC – Indian Railway Catering and Tourism Corporation) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா சேவைகளை வழங்கி வருகிறது.

ஐஆர்சிடிசி வருகிற பிப்ரவரி 2 முதல் பிப்ரவரி 13 வரை கும்பமேளாவுக்கு சிறப்பு ரயில் திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பிப்ரவரி 2ம் தேதி திருநெல்வேலியிருந்து  தொடங்கப்பட்டு
13ம் தேதி மீண்டும் திருநெல்வேலிக்கே பயணிகளைக் கொண்டு வந்துவிடும்.

இந்தத் திட்டத்தில் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி போன்ற திருத்தலங்கள் அடங்கும். உறுதி செய்யப்பட்ட படுக்கை வசதி 3 AC, 2AC வசதி கொண்ட இந்த ரயில் பயணத்தில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்படும். உணவு வசதி, ரயில் பிரயாணம், பயண நடுவில் பஸ் பயணங்கள், தங்கும் அறைகள், பிரயாகையில் டெண்டுகளில் தங்கும் வசதி, பயண பாதுகாப்பாளர்கள், பயண காப்பீடு உள்ளிட்ட அனைத்தும் ரயில் பயண கட்டணத்திலேயே அடங்கும்.

திருநெல்வேலியிலிருந்து புறப்படும் ரயில் 7ம் தேதி வாரணாசி சென்றடையும். அங்கே கங்கையில் புனித ஸ்நானம், கங்கா ஆரத்தி, வாரணாசியில் தங்குதல். 8ம் தேதி வாரணாசியில் உள்ளூர் ஆலயங்கள் தரிசனமும் அடங்கும்.

9ம் தேதி காலை அங்கிருந்து பேரூந்தில் புறப்பட்டு பிரயாக்ராஜ் சென்றடைதல், அங்கு  பிரயாக்ராஜில் இரவு தங்குதல். 10ம்தேதி காலை பிரயாகையில் புனித ஸ்நானம், ஆஞ்சநேயர் கோயில் செல்லுதல், இரவு பிரயாக்ராஜில் தங்குதல். 10ம் தேதி பிரயாக்ராஜிலிருந்து அயோத்திக்கு சாலை வழியாக பேருந்து பயணம். அங்கு சரயு நதியில் புனித ஸ்நானம், ராமச்சந்திரமூர்த்தி ஆலயம் மற்றும் அருகே இருக்கும் ஆஞ்சநேய ஆலயம் செல்லுதல்.

10ம் தேதி இரவு அயோத்தியிலிருந்து ரயில் திருநெல்வேலிக்குப் புறப்பாடு. 13ம் தேதி தேதி திருநெல்வேலி சென்றடைதல்.

நமது பாரதத்துக்கே உரிய பெருமையான கும்ப மேலாக்களில் மகத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுபவை பிரயாகை, ஹரித்வார், இந்தூர் கும்ப மேளாக்கள். இவற்றில் பிரயாகை கும்ப மேளா 144 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக ஆன்மிக உலகில் கருதப்படு
கிறது. இந்தச் சிறப்பு ரயிலில் பத்து பயணிகள் பெட்டிகள் இருக்கும். 40 பயணிகளுக்கு ஒரு குழு நிர்வகிப்பாளர்  என்கிற வகையில் பயண முழுவதும் பயணிகளின் தேவைகளை கேட்டறிந்து திட்டத்தை வெற்றிகரமாக்க முயன்று வருகிறார்கள்.

பிரயாகையில் டெண்டுகள் அமைக்கப் பட்டுள்ள இடங்களுக்கு அருகிலேயே பயணிகளை இறக்கி விட்டு பின்னர் மீண்டும் பயணிக்க தேவையான நேரத்தில் அந்த பேருந்துகள் வந்து காத்திருக்கும். பிற தனியார் வாகனங்கள் எல்லாம் டெண்டுகளுக்கு தள்ளி ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்படும்.

டென்டுகள் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் உணவு உண்ணும் வசதியுடன் அறைகள், யோகா விளையாட்டு வசதிகள், மாலை வேளைகளில் ஆன்மிக உரைகள் கேட்கும் வசதி, உணவு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  திருநெல்வேலி, தென்காசி, ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை ஜங்ஷன், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்
பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய இடங்களில் இந்த சிறப்பு ரயிலில் ஏறவும் இறங்கவும் முடியும்.

தகவல் : ராஜலிங்கம் போஸ்

(ஐ.ஆர்.சி.டி.சி பொது மேலாளர்)