குடும்பத்திற்கு அவசியமான தேவை எது என்பது பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்துள்ளது. வசதி, செல்வங்கள் அவசியம். தேவை என்பது ஒருபுறம் இருந்தாலும் அது மேலும் மேலும் நமது எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றது. நமக்கு அதன் மூலம் தன்னிறைவே கிடைப்பதில்லை. இதனால் அமைதியும் குறைகின்றது.
அது பல பிரச்சினைகளுக்கும் வழி வகுக்கின்றது. அடுத்து வம்ச விருத்தியினால் சுகம் கிடைப்பதென்பது நிச்சயமில்லை. அது நேருமாறாக இருந்தால் மிகவும் வேதனை ஏற்படுகின்றது. வம்சங்கள் நமது குழந்தைகளுடன் அன்பு எனும் பிணைப்பு அதிகமாக உள்ளது. அதன் மூலம் ஏதாவது ஊறு ஏற்பட்டால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. எதன் மேலும் அதிகப் பற்று இல்லாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை. பேச, எழுத வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். நடைமுறை வாழ்க்கையில் இது மிகவும் கடினம். ரத்தம் சம்பந்தப்பட்ட நமது உறவுகள் இறைவன் கிருபையால் நல்ல
விதமாக அமையவேண்டும். இல்லாவிட்டால் அதன் விளைவே மிகவும் பயங்கரமானது.
வெகு சிலருக்குத் தான் இன்றைய உலகில் குழந்தைகளால் அமைதியும், மன நிம்மதியும் ஏற்படுகின்றது. அதனால் குழந்தை செல்வங்கள் மூலம் கிடைக்கும் நிம்மதி. சந்தோஷம் நிரந்தரமல்ல. தியாகம் என்ற உயரிய பண்பினால் மட்டுமே நாம் நிரந்தர அமைதியை பெற முடியும், சந்தோஷத்தை எட்ட முடியும். இந்த தியாகம் என்ற பண்பு சகஜமாகவே குடும்பத் தலைவியிடம் இருந்து வந்தது. 24 மணிநேரமும் குழந்தைகள் நலன் பற்றிய சிந்தனைதான். அடுத்தபடியாக தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நலனுக்காகவும் கவனம் செலுத்துவாள். குடும்பம், ஆன்மிக கண்ணோட்டத்துடன் தொடர்நது இருக்க பாடுபடுபவள் பெண்தான். அதனால்தான் பண்டிகைகள் மிக சிறப்பாகக் நமது குடும்பங்களில் கொண்டாடப்படுகிறது.
உற்சவங்கள் கொண்டாடுவது நம்மவர்களை இணைக்க ஒரு சாதனம். அந்நிய படை எடுப்புகளுக்கு பிறகும் நமது கலாச்சாரம் சீரழியாததற்கு காரணம் பெண்கள்தான். பல நிலைகளில் அவர்கள் பெண்களை பாதுகாத்து வந்தார்கள். சகோதரியாக, மனைவியாக, பாட்டியாக குடும்பத்தை அரவணைத்து வருபவள் பெண்தான். சில பெண்கள் குடும்பத்தை கவனிப்பதோடு மட்டுமல்லாமல், பொது வேலைகளிலும் ஆரம்ப நாட்கள் முதலே ஈடுபட்டு வந்தார்கள்.
இப்படியாக தியாக உணர்வுடன் செய்யப்படும் காரியங்களுக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான். சேவைக்கும், தியாகத்திற்கு முதற்படி குடும்பம் தான். நாட்டிற்காக பல பணிகளை சகஜமாக ஏற்பார்கள் பெண்கள். இதற்கு பல வரலாற்று பதிவுகள் உள்ளன. நமது கலாச்சாரம் இன்றுவரை அழியாமல் புதுபொலிவுடன் இருப்பதற்கு காரணம் இப்படிப்பட்ட பெண்கள் தான்.