காணவந்த காட்சியென்ன, கண்டுவிட்ட கோலமென்ன!

 

இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எப்போதுமே தங்கள் பலத்தை நிரூபிக்க, குறைந்த
பட்சம் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ள ஏதாவது செய்துகொண்டேயிருப்பார்கள். மக்களை ஒருவித அச்சத்திலேயே வைத்திருப்பது அவர்களுக்கு வாடிக்கை. இதுவரை உலகெங்கும் இதே நிலவரம் தான். ஆனால் இப்போதெல்லாம் ஃபிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் இவர்களுக்கு பகிரங்கமாகவே எதிர்ப்புக் குரல் ஓங்கியுள்ளது.

இருந்தாலும் “நாங்கள் யார் தெரியுமா ! எங்கள் சக்தி தெரியுமா? ” என்கிற ரீதியில் அவ்வப்போது ஏதோ செய்வதும் உடனுக்குடன் மூக்குடைபடுவதும் பாரதத்திலேயே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சமைத்த பண்டங்களில் உமிழ்நீரைத் துப்பியதைக் கண்டுபிடித்தோம். அதற்கு அவர்கள் சமைத்தவருக்கும் உண்பவருக்கும் பந்தம் என்று ஏதேதோ காரணம் சொன்னார்களே  தவிர மறுக்கவில்லை.

 உணவகங்களில் உரிமையாளர் பெயர் கண்டிப்பாக இடம்பெற வேண்டுமென்ற யோகியின் அதிரடி அறிவிப்பால் தானே ஆரிய பவன்களுக்குப் பின்னால் ஒளிந்திருந்த ஆரிஃப் கான்கள் வெளிவந்தனர் !

 போன வருடம் ஹிஜாபை வைத்துப் பிரச்சனை செய்தனர்; நீதிமன்றம் உள்ளே நுழைந்தது.

 சமீபத்தில் கர்நாடகா காங்கிரஸ் அரசு ராமகிருஷ்ணா  என்கிற உடுப்பி அரசு பி.யூ கல்லூரி முதல்வருக்கு நல்லாசிரியர் விருது அறிவித்திருந்தது. அவர் ஹிஜாப் அணிவதை எதிர்த்தார், அவருக்கேன் விருது என SDPI  கேட்ட
தால் விருதைத் தரவில்லை காங்கிரஸ் அரசு. தொலைக்காட்சி ஊடகத்தில் பெரும் விவாதம் வெடித்தது. நேரடியாகவே அரசைச் சாடினர். வசமாக மாட்டிக்கொண்ட அரசு ‘‘இல்லையில்லை. விருது மறுக்கப்பட
வில்லை.தொழில்நுட்பக் காரணங்களால் நிறுத்திவைத்துள்ளோம் ” என்றது.

 இன்னொரு சம்பவம், ரயிலில்  கம்பார்ட்மென்ட் பாதையை அடைத்துக்கொண்டு துணியை விரித்து நமாஸ் செய்தனர் சிலர். முன்பெல்லாம் இதுபோல காட்சியைக் கண்டும் காணாதது போல் அல்லது மனதுக்குள் புலம்புவதோடு முடித்துவிடுவோம்.

ஆனால் இன்று டிக்கெட் பரிசோதகர், ரயில்வே போலீஸ் நேரே அந்தப் பெட்டிக்கு வந்து  பாதையை மறித்துத் தொழுகை நடத்த யார் உங்களுக்கு உரிமை தந்தது, உடனடியாக அகலுங்கள் என்று ஒரு பிடி பிடித்தார்களே அந்த வீடியோ தான் அதிகம் பகிரப்பட்ட வீடியோவாக இருக்கும்.

 முன்பெல்லாம் பல மாநிலங்களில் புறம்போக்கு / வனப்பகுதி நிலத்தை கபளீகரம் செய்ய தர்கா முளைக்கும்; பஞ்சாயத்தார் மிரண்டு ஒதுங்குவார்கள். இப்போது அதை சூட்டோடு  சூடாக சுத்தம் செய்து விடுகிறார்கள்.

 எங்கள் தெரு வழியே அம்மன் பவனி ஊர்வலம் வரக்கூடாது என்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் சிலர்  முரண்டு பிடித்தார்கள். அனைவரும் பொது வீதி வழியாக செல்வதை அரசியல் சாஸனம் அடிப்படை உரிமையாக வழங்கியுள்ளது என்று நீதிமன்றம் ஹிந்து திருவிழவுக்கு வந்த குந்தகத்தை தட்டியெறிந்தது.

மக்கள் சுதாரித்துக்கொண்டு வெகுநாளா
யிற்று என்பதை அறியாத சிலர் இன்னமும் கோமாளித்தனங்களைத் தொடர்கின்றனர் என்பதற்கு கோவை முக்காடு சம்பவம் ஒரு சான்று. தமிழகத்தில் என்ன நாடகம் வேண்டு
மானாலும் ஆடலாம். அரசு தலையிடாது. (பயம் ?? இருக்கலாம்!). அதிலும் கோவை இவர்கள் அதிரடி வாடிக்கையாகியுள்ள நகரம். அதனால் தான் அந்த யூ டியூப் அம்மையார் ஹிஜாபைத் தூக்கிக்கொண்டு கோவை வீதியில் நின்றுகொண்டு பார்ப்பவரிடமெல்லாம் “நீங்கள் ஹிஜாப் அணிந்தால் எப்படியிருக்கும், அணிந்து பாருங்களேன்??  என்ற அசட்டுக் கேள்வியைக் கேட்டு ஹிஜாபை மாட்டிவிட்டு வீடியோ எடுத்தார். மக்களின் கண்டனம் வலுக்குமென்று அவரும் எதிர்பார்க்கவில்லை; அரசே எதிர்பார்க்கவில்லை. அவரைக் கைது  செய்து சேனலையும் தடை செய்துவிட்டதாகக் கேள்வி.

இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு மாட்டிக் கொள்வது அடிப்படைவாதிகளின் உதறலையே வெளிப்படுத்துகிறது. கூடவே நமது விழிப்புணர்வையும் காட்டுகிறது.

ஏமாற்றாதே….ஏமாறாதே