விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின், ஆர்கனைசருக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் கூறியதாவது:
ஹிந்து ஆலய வளாகங்களில் ஹிந்து மதத்தைச் சாராதவர்கள் பூஜைக்குரிய பொருட்களை விற்கிறார்கள். மசூதி அருகே முஸ்லிம் அல்லாத ஒருவர் நமாஸுக்கு உரிய பொருட்களை விற்க முடியுமா? இந்த நியாயமான கேள்விக்கு தெளிவான பதிலைச் சொல்ல முஸ்லிம்கள் முன் வருவார்களா? ஹிந்துக்களிடையே விழிப்புணர்ச்சி வலுப்பெற்று வருகிறது. இந்த தகாத செயல் முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
ஹிந்து மதத்தில் அனாவசிய தலையீடுகள் உள்ளன. ஆக்கிரமிப்பாளர்கள் ஹிந்து ஆலயங்களை சூறையாடினார்கள். பொக்கிஷங்களை கொள்ளை
யடித்தார்கள். விக்கிரகங்களை உடைத்தார்கள். இப்போது அரசின் கட்டுப்பாட்டில் ஹிந்து கோயில்கள் உள்ளதால் விரும்பத்தகாத சில நிகழ்வுகள் நடைபெறுகின்றன. கோயிலின் சொத்து ஆன்மீகம் சாராத பணிக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது.
ஹிந்து ஆலயச் சொத்து, முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது துஷ்பிரயோகம் இல்லையா? ஆலயங்கள், அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது
நிலைப்பாடு.
பசுவை கோமாதா என்று போற்றுவது பாரத பண்பாடு. ஆனால் பசுக்களை கொன்று மாமிசத்தை சாப்பிட வேண்டும். அதை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதிலேயே முஸ்லிம்கள் குறியாக இருக்கிறார்கள். கேரளா, கர்நாடகா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களை தாஜா செய்வதற்காக பசுவதை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
முன்பு காஷ்மீரில் என்ன நடைபெற்றதோ, இப்போது அதே நிகழ்வுதான் மேற்கு வங்காளத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முல்லாக்களும், கிறிஸ்தவப் பாதிரிகளும் செய்து வரும் அட்டூழியத்துக்கு அளவே இல்லை. ஹிந்துக்கள் பாதுகாப்பாக வாழ முடியவில்லை.
கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை உத்தரப்பிரதேச அரசு வலுப்படுத்தியுள்ளது. இதை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மற்ற மாநில அரசுகளும் செயல்பட வேண்டும். இதன் வாயிலாக லவ் ஜிகாத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும்.
கேரள உயர்நீதிமன்றம் கூட லவ் ஜிகாத் விவகாரம் குறித்து குறிப்பிட்டுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது. இதை சாதாரண பிரச்சினையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை கட்டுப்படுத்த தவறினால் பாரதம் மண்ணிலேயே ஹிந்துக்களை விட முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் ஆபத்து உள்ளது.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி