நெல்லையில் உள்ள அருள்மிகு நெல்லையப்பர் –காந்திமதி கோயிலுக்கு இரண்டு கார்கள் வாங்கப்பட்டுள்ளது. அந்த இரண்டு கார்களும் கோயில் நிதியிலிருந்து வாங்கப்
பட்டு, அதனுடைய ஓட்டுநர் ஊதியம் மற்றும் பெட்ரோலுக்கான செலவு ஆலய நிதியிலிருந்து செலவழிக்கப்படுகிறது. ஆலயத்திற்கென வாங்கப்பட்ட இந்த கார்கள் மண்டல துணை ஆணையரும், இணை ஆணையரும் பயன்படுத்துகின்றனர். கோயிலின் நிர்வாக அதிகாரி வரி வசூலிக்க ஆட்டோவைப் பயன்படுத்தி அதற்கான செலவுகளை கோயில் கணக்கில் எழுதுகிறார். கோயிலின் ஆன்மிகப் பணிகளுக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத இந்தச் செலவுகளும் ஆலய அன்றாடச் செலவிலேயே கணக்கிடப்படுகிறது.
சிவராத்திரி கொண்டாட்டம் என்ற பெயரில் ஆலயத்திற்கு சம்பந்தம் இல்லாத மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களோ அல்லது ஆன்மிக அன்பர்களோ அங்கு போய் கலந்து கொள்வதில்லை. மேலும் அரசின் துதிபாடிகளை சிறப்பு பேச்சாளர் என்ற பெயரில் அழைத்து வந்து ஆட்சியாளர்களுடைய புகழ் பாடும் மேடையாக அதனை மாற்றி விடுகிறார்கள். இதில் ஆன்மிகத்திற்கும் சம்பந்தமே இல்லாத எதிர்மறை கருத்தாளர்கள், மாற்றுமத நம்பிக்கையாளர்களும் அடக்கம். இவர்கள் இறைவன் குறித்து என்ன பேசிவிடப் போகிறார்கள். இவர்களுக்கு பயணச் செலவு, தங்கும் செலவு, திண்ணும் செலவு, கூடுதலாக சன்மானம் என பல ஆயிரக்கணக்கான ரூபாய் கோயிலின் வைப்பு நிதியிலிருந்து எடுத்து செலவு செய்யப்படுகிறது. இந்த விழாக்களின் வரவு செலவு குறித்த விவரங்களைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விவரம் கேட்டபோது அதற்கான பதிலை அறநிலையத்துறை வழங்குவதற்கு தயராக இல்லை. உண்மையான கணக்கு விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவித்தால் இவர்களது முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வருமென்ற பயம் காரணமாகவே தகவல் தர தயக்கம் காட்டுகிறது. மேலும் ஆலயத்தின் வரலாறு சிறப்பு குறித்து கணினிமயமாக்கும் திட்டத்திற்காக பல லட்ச ரூபாயை வீணாடித்துள்ளது.
60 வயதைக் கடந்தவர்களுக்கு அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகச் சுற்றுலா என்ற பெயரில் ஒரு சுற்றுலாவை ஹிந்து அறநிலையத்துறை தொடங்கியுள்ளது. இதற்கான செலவுகள் அனைத்தும் ஆலய நிதியி
லிருந்தே நேரிடியாக செலவு செய்யப்படுகிறது. ஆலய வளர்ச்சிக்கோ, ஆன்மிக வளர்ச்சிக்கோ இது எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை. ஏனென்றால் பயனாளிகள் எல்லோருமே அவர்களுடைய ஆதரவாளர்
களும், துதிபாடிகளுமாகவே இருப்பார்கள். பிற மத, புனிதப் பயணம் போன்று குறிப்பாக ஹஜ், ஜெருசலேம் யாத்திரை போன்று அரசு நிதியிலிருந்து செலவிடப்பட்டால் இதுகுறித்து நாம் கேள்வி கேட்கப் போவதில்லை. சிறுபான்மையினருக்கு மக்களின் வரிப்பணத்திலிருந்து செலவு செய்து விட்டு இதுபோன்ற ஹிந்து புனித யாத்திரையை அறநிலையத்துறையிலிருந்து செலவு செய்வது எந்த வகை நியாயம்?
தகவல் :
மாநில துணைத்தலைவர்
இந்து முன்னணி