காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு படையினர் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், அங்கு நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். காஷ்மீரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், பயங்கரவாத எதிர்ப்பு திறன்களை முழு அளவில் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும் ஆலோசனை நடத்தினார். காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹாவுடனும் மோடி பேசினார். அப்போது மாநில அரசு செய்த நடவடிக்கைகள் குறித்து கவர்னர் விளக்கினார்.