ஒரே ஒரு வாக்காளரை கொண்ட வாக்குச்சாவடியில் 100% வாக்குப்பதிவு

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஒவ்வொரு வாக்காளரும் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஓட்டளிப்பதை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஆசிய சிங்கத்தின் கடைசி வாழ்விடமான பாதுகாக்கப்பட்ட கிர் வனப்பகுதியில் அமைந்துள்ள பனேஜில் மஹந்த் ஹரிதாஸ் உதாசீன் என்ற ஒரே வாக்காளர் மட்டுமே உள்ளார்.
மூன்றாம் கட்ட தேர்தல் நாளான நேற்று முன்தினம் அவர் ஒருவரின் வாக்கைப் பெறுவதற்காக தேர்தல் ஆணையம் 10 பேர் கொண்ட குழுவை அமைத்து பனேஜில் வாக்குச் சாவடிக்கு ஏற்பாடு செய்தது. உதாசீன் நேற்று தனது ஓட்டை செலுத்தி அந்த வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்தார்.