மோடி 3வது முறையாக பிரதமர் ஆவது உறுதி

அகஸ்தீஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது : கன்னியாகுமரி மண்ணையும், பிரதமர் மோடியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது. இந்த மண்ணில் தான்,1995ல் இருந்து தான் மோடி, ஒற்றுமை யாத்திரையை ஆரம்பித்தார். குமரி மண்ணின் மைந்தராக மோடி உள்ளார். நமது நாட்டை வல்லரசு நாடாக மாற்றுவதற்காக உறுதியுடன் இங்கு வந்துள்ளார்.

‛ இண்டியா ‘ கூட்டணியில் குடும்ப கட்சிகள், வாரிசுகளை பதவியில் அமர்த்தும் கட்சிகளே உள்ளன. மக்களே என் குடும்பம் 142 கோடி இந்தியர்களே எனது குடும்பம் என மோடியின் குடும்பமாக சகோதரர் ஆக சகோதரிகளாக உள்ளனர்.

400 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கு வெறும் வாய்ச்சொல் கிடையாது. இந்திய மக்களின் உணர்வு. அடுத்த 25 ஆண்டுகளுக்கான கனவுடன் பிரதமர் மோடி வந்திருக்கிறார். நாட்டில் குடும்ப ஆட்சியை ஒழித்து, தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உழைத்து வருகிறார்.

1892 ல் குமரிக்கு வந்த நரேந்திர தத்தா பாறை மீது அமர்ந்து விவேகானந்தராக மாறினார்.
தற்போது வந்துள்ள பிரதமர் மோடி ‛விஸ்வகுரு’வாகமாறி உள்ளார்.2047 ல் மோடி தலைமையில் இந்தியா வல்லரசு நாடாகும். குமரி முதல் காஷ்மீர் வரை அ னைத்து கட்சிகளும் தேஜ கூட்டணியில் உள்ளன. 3வது முறையாக பிரதமர் மீண்டும் பிரதமர் ஆவார். இது உறுதி. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசுகையில், தமிழகத்தில் 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் வளர்ச்சிக்காக கொடுத்துள்ளார்.மோடி பிரதமர் ஆன பின்பு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை. மீனவர் நலனுக்காக தனியாக ஒரு அமைச்சகம் ஏற்படுத்தி, 38,500 கோடி ரூபாய், மீனவர் நலனுக்காக ஒதுக்கி உள்ளார். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குமரி, தூத்துக்குடி சார்ந்த 5 மீனவர்களை ஒரே தொலைபேசி வாயிலாக பிரதமர் மீட்டார். மீனவர் நலனில் உண்மையான அக்கறையுள்ள தலைவராக மோடி திகழ்கிறார்.2021 சட்டசபை தேர்தலில் வேல் யாத்திரை மூலம் 4 எம்.எல்.ஏ.,க்கள் வென்றனர்.எண் மண் மக்கள் யாத்திரை மூலம் 40 தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறும். 3வது முறையாக 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று 3வது ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று. இவ்வாறு எல். முருகன் பேசினார்.