காசி, அயோத்திக்கு ஆன்மிக ரயில்

‘தமிழகத்தில் இருந்து காசி, அயோத்திக்கு வரும், 31ம் தேதி ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது’ என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன், கோவில்கள் மற்றும் முக்கிய சுற்றுலா இடங்களுக்கு, ரயில்வேயால் சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

வரும் 31ம் தேதி தமிழகத்தில் இருந்து காசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு ஆன்மிக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. 11 நாட்கள் பயணமாக இந்த ஆன்மிக சுற்றுலா ரயில், கோவையில் புறப்பட்டு செங்கோட்டை, தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், சென்னை வழியாக இயக்கப்படும்.

இந்த ஆன்மிக யாத்திரையில் பூரி ஜெகநாதர், கோனார்க் சூர்யநாராயணர், புவனேஸ்வர் லிங்கராஜ் கோவில், கோல்கட்டா காளி, தக்ஷிணேஸ்வர், பேலுார் மடம், கயாவில் பிண்ட தர்ப்பணம், காசியில் கங்கை நதியில் புனித நீராடி, விஸ்வநாதர் ஜோதிர்லிங்கம், விசாலாட்சி, அன்னபூரணி தரிசனம், அயோத்தியில் பால ராமர் தரிசனம் மேலும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ‘ஏசி’ அல்லாத பெட்டியில் ஒருவருக்கு 23,750 ரூபாய் கட்டணம். இதுகுறித்து மேலும் தகவல் பெற, 73058 58585 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.