பக்த துகாராம் பண்டரிநாதன் மீது மிகுந்த பக்தி உடையவர். அவரின் முயற்சியால் பண்டரிபுரத்தில் அற்புதமான பண்டரிநாதன் கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றது. வியாபாரம் செய்து வந்த அவர் ஏழை எளிய மக்களுக்கு தாராளமாக உதவி வந்தார். அதனால் வீட்டில் தரித்திரம் தாண்டவமாடியது.
ஒருநாள் பக்த துகாராம்ஜி, தனது வயலிலிருந்து கரும்பு எடுத்து வந்து கொண்டிருந்தார். வழியில் ஏழை மக்கள் கரும்பு வேண்டும் எனக் கேட்டனர். இளகிய மனம் படைத்த அவரும் அனைத்தையும் அவர்களுக்கு கொடுத்துவிட்டார். ஒரே ஒரு கரும்புதான் மீதமிருந்தது. அதை எடுத்துக் கொண்டு அவர் வீடு சென்றார்.
வீட்டின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. உண்பதற்கு தானியம் இல்லை. அத்துடன் அவரது மனைவி ஜீஜாபாய்க்கு, மிகவும் கடுமையான சுபாவம். அவள் சிடுசிடுப்புடன் கரும்பை அவரது கையிலிருந்து பிடுங்கி வேகமாக அவரது முதுகில் அடித்தாள். கரும்பு இரண்டு துண்டாகிவிட்டது.
நாம் இருவரும் உண்பதற்காக அதை நானே இரண்டாக உடைக்க வேண்டியிருந்தது. நீ இயல்பாகவே அதைச் செய்துவிட்டாய். நல்லாதாயிற்று” எனச் சிரித்துக்கொண்டே கூறினார் துகாராம். அவரது மனைவியும் சிரித்துவிட்டாள். அவரது இயல்பான நகைச்சுவை உணர்வினால் சூழ்நிலை மகிழ்ச்சி நிறைந்ததாகிவிட்டது.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்