பிரதமரின் செல்பி பாயின்ட் இடம் தராமல் அரசு அடம்

தமிழக ரேஷன் கடைகளில், 1.14 கோடி முன்னுரிமை, அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு இலவச மாக வழங்க மாதம், 2 லட்சம் டன் அரிசியை, மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது. பல மாநிலங்களில், மத்திய அரசு இலவசமாக வழங்கும் அரிசியை மாநில அரசுகள், தங்கள் நிதியில் இருந்து வழங்கு வது போல கார்டுதாரர்களிடம் விளம்பரம் செய்கின்றன. எனவே, இலவச அரிசி விபரத்தை கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ள, ரேஷன் கடைகளில் பிரதமரின் மோடியின் புகைப்படம் இடம் பெற்ற, ‘செல்பி பாயின்ட்’ அமைக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதற்காக, தமிழகத்தில், 1,500 ரேஷன் கடைகளில் செல்பி பாயின்ட் அமைக்க, மத்திய அரசு சார்பில் இடம் கேட்கப்பட்டது. அங்கு, இந்திய உணவு கழகம் செல்பி பாயின்ட் அமைக்கும். லோக்சபா தேர்தல் அறிவிப்பு, இம்மாத இறுதி அல்லது மார்ச் துவக்கத்தில் வெளியாகிறது. அதற்குள் செல்பி பாயின்ட் அமைக்கும் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை, ஒரு இடம் கூட வழங்காமல் தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது.