”ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, பிரத்யேக ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்கப்படுகிறது,” என, ஐ.சி.எப்., பொது மேலாளர் மால்யா தெரிவித்தார்.
சென்னை, பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஐ.சி.எப்., பொது மேலாளர் மால்யா, தேசியக்கொடி ஏற்றினார்.
பின், அவர் பேசுகையில், ”ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இயக்க, அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற, புதிய வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தயாரிப்பு பணிகள் முடிந்த பின், ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும்,” என்றார்.