தேனி மாவட்டம், கம்பம், பாரதியார் நகர் மணிவாசகன் மகன் பரத்குமார், 18. வீரபாண்டி சவுராஷ்டிரா கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்தார்.
நவ., 24 மாலை கல்லுாரி முடிந்து, கம்பம் நோக்கி டூ — வீலரில் வந்தார். உத்தமபாளையம் அருகே கோவிந்தன்பட்டியை கடந்து சென்ற போது, காமயக்கவுண்டன்பட்டியை சேர்ந்த ராம்குமார், 27, ஓட்டிய டூ — வீலர் அதிவேகமாக பரத்குமார் டூ — வீலர் மீது மோதியது. பலத்த காயமடைந்த பரத்குமார், மதுரை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு இறந்தார். ராம்குமாருக்கும் காயம் ஏற்பட்டது. பரத்குமார் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, சென்னை, மதுரை, திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நேற்று மாலை, கம்பத்தில் மாணவர் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.