பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் தீபாவளி நாளில் நடந்த சாலை விபத்துகள், கொலைகளில், 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு மது மற்றும் கஞ்சா போதை தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10, 11, 12 தேதிகளில் தமிழகத்தில், 633 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் வழங்கப்பட்ட, 1,138 கோடி ரூபாயில் பாதியாகும்.
மகளிர் உரிமைத் தொகையில் பெரும் பகுதி, மது வணிகம் என்ற பெயரில், அரசுக்கே திரும்ப வரும் அவலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலை நீடிக்கும் வரை தமிழக மக்களுக்கு எந்த விடியலும் கிடைக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்