மராத்தா இட ஒதுக்கீடு; அவசர முடிவு எடுக்க முடியாது – ஏக்நாத் ஷிண்டே

மராத்தா சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, நாங்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மராத்தா சமூகத்தி னருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை நடந்தது. இது தொடர்பாக, அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மராத்தா இடஒதுக்கீடு குறித்து சட்டப்பூர்வமாக முடிவு எடுக்கப்படும். நாங்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாது. மராத்தா சமூகம் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின் தங்கியுள்ளது. ஆனால் இவர்களுக்கு வழங்கும் இட ஒதுக்கீட்டால் மற்ற சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்பட கூடாது. இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு முன்னதாக மராத்தா இட ஒதுக்கீடு வழங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.