ராஜஸ்தானில் காங்கிரசிற்கு ஆட்சியில் இருக்க உரிமை இல்லை; நட்டா தாக்கு

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பேரணியில், நட்டா பேசியதாவது: ராஜஸ்தானில் வளர்ச்சிக்கு அங்கு நிலவும் ஊழல், அடக்குமுறை உள்ளிட்டவை தடையாக உள்ளன. மாநிலத்தில் கலாசாரத்தை பாதுகாக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் பாஜ., தொடர்ந்து முயற்சிக்கிறது. அசோக் கெலாட் தலைமையிலான மாநில அரசில் ஊழல், அடக்குமுறை, சர்வாதிகாரம் உள்ளது. ராஜஸ்தானில் ஊழலை வெட்கமின்றி மாநில அரசு ஊக்குவிக்கிறது. ராஜஸ்தான் மாநில அரசு மக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடித்து சித்திரவதை செய்கிறது. பழங்குடியினர், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏழைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து காணப்படுகிறது. இது ராஜஸ்தான் மாநிலத்தில், அசோக் கெலாட் தலைமையிலான காங்., ஆட்சியில் குற்ற சம்பவங்களில் முந்தைய சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. இதனால் ஒரு நிமிடம் கூட ஆட்சியில் இருக்க உரிமை இல்லை. ராஜஸ்தானில் தினமும் 5-7 கொலைகள் நடக்கின்றன. 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு ஆட்சியில் உள்ள மாநில அரசுக்கு பதிலடி கொடுப்பது ராஜஸ்தான் மக்களின் பொறுப்பு. இவ்வாறு அவர் பேசினார்.