அமெரிக்க பத்திரிகையாளருக்கு பிரதமர் மோடி அளித்த பதில்

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது மனித உரிமைகள் குறித்து கேள்வி எழுப்பிய WSJ நிருபர் சப்ரினா சித்திக், “உங்கள் அரசாங்கம் மத சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், அதை விமர்சிப்பவர்களை மௌனமாக்க முயல்வதாகவும் கூறும் பல மனித உரிமைக் குழுக்கள் உள்ளன. உங்கள் நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினரின் உரிமைகளை மேம்படுத்தவும், பேச்சுரிமையை நிலைநிறுத்தவும் என்ன நடவடிக்கைகளை எடுக்க நீங்களும் உங்கள் அரசாங்கமும் தயாராக இருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

சித்திக்கின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி, ஜனநாயகம் மற்றும் தமது அரசாங்கத்தின் செயல்பாடு, மனித உரிமைகள் குறித்த இந்தியாவின் சாதனையை தெளிவாக எடுத்துக் கூறினார். தமது அரசின் அடிப்படை ‘அனைவருக்கும் ஆதரவும், அனைவரது வளர்ச்சி,  அனைவரது நம்பிக்கை, அனைவரது முயற்சி’ என்று கூறினார்.

“இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களில், சாதி, மதம், வயது அல்லது எந்த விதமான புவியியல் இருப்பிடத்தின் அடிப்படையிலும் எவ்வித பாகுபாடும் இல்லை. இந்தியா ஜனநாயக நாடு. மேலும் ஜனாதிபதி பிடன் குறிப்பிட்டுள்ளபடி, இந்தியாவிலும் அமெரிக்காவிலும், இரு நாடுகளிலும், ஜனநாயகம் நமது டிஎன்ஏவில் உள்ளது. ஜனநாயகம் நமது ஆத்மா. ஜனநாயகம் நம் நரம்புகளில் ஓடுகிறது. நாங்கள் ஜனநாயகத்தில் வாழ்கிறோம்” என்று பிரதமர் தனது பதிலில் கூறினார்.