அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு, 25ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார்.கடந்த 21-ல் ஐ.நா.தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்றார்.தொடர்ந்து வெள்ளை மாளிகை வந்த பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.மோடியை, அதிபர் ஜோ பைடன், மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.அப்போது வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட்டது. பின்னர் மோடியை வரவேற்று ஜோ பைடன் பேசியதாவது: வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி மீண்டும் வந்திருப்பது எங்களுக்கு பெருமிதம். அமெரிக்க இந்தியா உறவு மேலும் வலுவடைந்து உள்ளது.இந்த 21-ம் நூற்றாண்டில் இந்திய- அமெரிக்க இடையோன நட்புறவு உலகளாவிய நன்மைக்கானது.இந்தியாவின் ஒத்துழைப்புடன் இந்தோ -பசிபிக் பிராந்திற்காகவும், உலக நன்மைக்காவும் ‘குவாட்’ அமைப்பை பலப்படுத்தியுள்ளோம்.
அமெரிக்க அரசு எனக்கு அளித்த வரவேற்பு 140 கோடி இந்தியர்களுக்கான கவுரவமாகும்.அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.இந்தியர்களுக்காக வெள்ளை மாளிகையின் கதவுகள் திறக்கப்பட்டு இருக்கின்றன.இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர் .அமெரிக்கா இந்தியாவின் உறவின் உண்மையான பலம் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் தான்.பிரதமரான பின்னர் பல முறை வெள்ளை மாளிகை வந்த பின்னரும் தற்போது வெள்ளை மாளிகை கதவுகள் பெரிய அளவில் திறந்து உள்ளன.அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்கின்றனர்.உலகம் முழுவதும் வலிமையை மேம்படுத்தும் வகையில் அமெரிக்கா -இந்தியா நட்புறவு இருக்கும்.அமைதி, ஸ்திரத்தன்மை உள்ளிட்டவற்றை நிலைநாட்ட இருநாடுகளும் இணைந்து செயல்படுவது என உறுதி பூண்டுள்ளோம்.கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் உலகம் புதிய வடிவத்தை பெற்றுள்ளது.ஜோ பைடனுடான பேச்சுவார்த்தை சாதகமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் பேசினார்.