மணல் மாபியாவுக்கு ஆதரவாக பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ

ஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடி, ஓட்டேரி ஏரியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சிலர் மண் அள்ளுவதாக, பட்டுக்கோட்டை பொறுப்பு டி.எஸ்.பி., பாலாஜிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்படி, தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, மண் அள்ளிய ஜே.சி.பி., மற்றும் டிராக்டர்களை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். இதே போல, கரம்பயத்தில் உள்ள நசுவன் குளத்திலும் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளிய வாகனங்களை பறிமுதல் செய்து, ஐந்து ஜே.சி.பி., ஒரு டிராக்டரை பறிமுதல் செய்து, மூன்று பேரை கைது செய்தனர்.

இதையடுத்து, பட்டுக்கோட்டை தி.மு.., – எம்.எல்.., அண்ணாதுரை, டி.எஸ்.பி., பாலாஜியிடம், போனில் தொடர்பு கொண்டு, மணல் அள்ளியவர்களுக்கு ஆதரவாகவும், பறிமுதல் செய்த வாகனங்களின் சாவியை கேட்டும் பேசி உள்ளார்.

எம்.எல்..,: திட்டக்குடியில் தாசில்தார் அனுமதியுடன் மண் அள்ளி இருக்காங்கதாசில்தார் சம்பவ இடத்திற்கு போய் பாத்துட்டு, எனக்கு தகவல் கொடுத்தார். நான், உடனே மண் அள்ளுவதை நிறுத்த சொல்லிட்டேன்.

தாசில்தார் ஒத்துக்கிட்டு போயிட்டார். சுமூகமா முடிஞ்சிருச்சுஇப்ப நம்ம எஸ்.., நீங்க சொன்னா தான் சாவி தருவதா சொல்றாங்க.

டி.எஸ்.பி.,: சார், பக்காவா மேல வரைக்கும் தகவல் போயிடுச்சுநாங்க விட்டா எங்க மேல தப்பு வந்துரும்இரண்டாவது, 2, 3 அடின்னு இல்லாமல், 20, 25 அடி தோண்டிக்கிட்டு போயிட்டு இருக்காங்க. இது நாளைக்கு அலிகேஷன் ஆயிடும். மண் அள்ள கொடுத்த தேதியும் எக்ஸ்பைரி ஆகி இருக்குனு சொல்றாங்கஇப்படி இருக்கும் போது

எம்.எல்..,: தாசில்தார் சொல்றாங்கஅப்பறம் நீங்க அவரை கேட்டுக்கங்கஎனக்கும் ரூல்ஸ் தெரியும்; நானும் அட்வகேட் தான்என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுங்கஅதுக்கு எல்லாம் நான் விளக்கம் சொல்ல முடியாது.

தாசில்தார் சொல்லி இருக்கார். நான் உங்ககிட்ட சொல்றேன். நீங்க ஒபே பண்ணா பண்ணுங்க; இல்லாட்டி போங்கநீங்கள் அத்தாரிட்டி இல்லதாசில்தார் தான் அத்தாரிட்டி.

டி.எஸ்.பி.,: ஒபே பண்ண முடியாது சார்கேஸ் போட்டு இருக்கேன் பார்த்துக்கோங்க.

எம்.எல்..,: பாத்துக்க

இவ்வாறு எம்.எல்.., மிரட்டும் தொனியில் பேசிய ஆடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இச்சம்பவம் பட்டுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆடியோ வெளியானது எப்படி; டி.எஸ்.பி., வெளியிட்டாரா அல்லது எம்.எல்.., தரப்பில் வெளியிடப்பட்டதா என்ற கோணத்தில் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.