குடியரசுத்தலைவர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 75 பழங்குடியின அமைப்புகளுக்குச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பொருளாதார ரீதியாக நலிவுற்ற பழங்குடியின குழுக்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு கௌரவிக்கவுள்ளார்.
மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து இந்நிகழ்ச்சயின் மூலம் எடுத்துரைக்கவுள்ளார்.
இவர்கள் குடியரசுத்தலைவர் மாளிகையை சுற்றிப்பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் இணையமைச்சர் ரேணுகா சிங்` பங்கேற்கவுள்ளனர்.