அரசின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் – பிரதமர்

ரசு நிர்வாகம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பது அனைத்து அரசு ஊழியர்களின் கடமை என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இம்மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது : ஒரு காலத்தில் பயிற்சி மையங்களில் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவது தண்டனையாக கருதப்பட்டது. தற்போது அந்நிலை மாறியுள்ளது, பயிற்சி மையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மிகச்சிறந்த அரசு ஊழியர்களை உருவாக்குபவர்கள் என்ற நிலை உருவாகியுள்ளது என்றார். மக்களுக்கு நமது இராணுவத்தின் மீது மிகுந்த நன்மதிப்பு பெற்றுள்ளது. இதுபோன்று அரசு நிர்வாகம் மீது நம்பிக்கையை அதிகரிக்க செய்வது அரசு ஊழியர்களின் கடமை ஆகும். அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாகவும், அர்ப்பணிப்பு உணர்வோடும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும். மக்களுக்கான திட்டங்களை திறம்பட செயல்படுத்த வேண்டும்.

அரசு அதிகாரிகள் கிழ்நிலை, மேல்நிலை என்ற பாகுபாடு இல்லாமல் பணியாற்ற வேண்டும். சாமானிய மக்கள் அளிக்கும் ஆலோசனைகளையும் பரிசீலனை செய்ய வேண்டும். தூய்மை இந்தியா திட்டம், முன்னேற விரும்பும் மாவட்டம், அம்ரித் அணை திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம் ஆகிய திட்டங்கள் மக்களின் ஆலோசனையால் கொண்டுவரப்பட்டு வெற்றிப்பெற்றுள்ளன என்று கூறினார்.