காங்கிரஸின் இலவச மின்சாரம் வாக்குறுதி சிக்கலில் தள்ளியது!

கர்நாடகாவின் கொப்பலில் ஒருவரிடம் குல்பர்கா மின்சார விநியோக நிறுவன லிமிடெட் (GESCOM)  ஊழியர்  மின் கட்டணத்தை செலுத்த கேட்டபோது தாக்கபட்டார்.

காங்கிரஸின் இலவச மின்சாரம்’ தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதி அக்கட்சியை பெரும் சிக்கலில் ஆழ்த்தப் போவதாகத் தெரிகிறது, சித்ரதுர்கா சம்பவத்திற்குப் பிறகு,தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதியைக் காரணம் காட்டி கிராம மக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்த மறுத்த நிலையில், இப்போது அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி அறிவித்த ஐந்து ‘உத்தரவாதங்களில்’ ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளில் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த ‘உத்தரவாதங்களுக்கு’ ஒப்புதல் முத்திரை அளிப்பதாக காங்கிரஸ் பலமுறை கூறியது.இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

கடந்த 6 மாதங்களாக 9,000 ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டிய பாக்கியை செலுத்தாததால், மின்சார நிறுவன ஊழியர் ஹிரேமட்டின் மின் இணைப்பைத் துண்டிக்கச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம், மற்றொரு வீடியோ இணையத்தில் வெளிவந்தது, அதில் காங்கிரஸின் தேர்தலுக்கு முந்தைய ‘இலவச மின்சாரம்’ வாக்குறுதியைக் காரணம் காட்டி கிராம மக்கள் ஒரு குழு மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த மறுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ கர்நாடகாவின் ஜாலிகட்டே பகுதியைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.