கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமது அரசு கடந்து வந்த வளர்ச்சிப் பயணத்தை வெளிப்படுத்தும் இணையதள இணைப்பை பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நாட்டின் வளர்ச்சிக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அளித்துள்ளோம். nm-4.com/9yrsofseva என்ற இணையதள முகவரிக்குள் சென்று நமது வளர்ச்சிப் பயணத்தை பார்வையிடுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மக்கள் எத்தகைய பயனை அடைந்திருக்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” என . #9YearsOfSeva என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.