டெல்லி ரோஹிணியில் உள்ள ஷாபாத் டெய்ரி பிரிவைச் சேர்ந்த ஷாஹில் என்ற முஸ்லிம் நபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவர் நிக்கி என்ற 16 வயது ஹிந்து சிறுமிக்கும் சில காலம் பழக்கம் இருந்துள்ளது. இருவருக்கும் அண்மையில் சிறு பிரச்சனை ஏற்பட்டது. மே 28 அன்று ஷாஹிலின் நண்பர் வீட்டு விசேஷத்திற்கு சென்று கொண்டிருந்த நிக்கியை தடுத்து நிறுத்திய ஷாஹில், அவரை மிகக் கடுமையாக தாக்கினார். கத்தியால் 20 முறை குத்தியும் ஆத்திரம் அடங்காமல் சிமென்ட் ஸ்லாபால் அடித்து கொடூரமாகக் கொலை செய்தார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்த கொடூர குற்றவாளியை காவல்துறை தனிப்படைகள் அமைத்துத் தேடிவந்தனர். உத்தரப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர். இந்த சூழலில், இச்சம்பவம் குறித்து வேகமகவும் நியாயமாகவும் விசாரணை நடத்துமாறு டெல்லி காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கூறியுள்ளதுடன் இது தொடர்பாக 3 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றையும் அமைத்துள்ளது. தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் டெலினா கொன்குப்த் தலைமையிலான அந்த மூவர் குழு ,விசாரணை நடத்துவார்கள், காவல் துறையினரையும் அவ்வப்போது சந்தித்து இவ்வழக்கின் முன்னேற்றம் குறித்து விசாரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பா.ஜ.க பிரமுகர் கபில் மிஷ்ரா, “டெல்லியில் ஒரு வேதனை தரும் கொலை நடந்துள்ளது. ஒரு ஹிந்து சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சர்ஃபராஸ் என்பவரின் மகன் ஷாஹில் இந்த கொடூரச் செயலை செய்துள்ளார். இன்னும் டெல்லி தெருக்களில் எத்தனை கேளர ஸ்டோரி சம்பவங்கள் நிகழப் போகின்றனவோ? ஷ்ரத்தா என்ற இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் இன்னொரு படுகொலை நடந்துள்ளது” என்று கூறியுள்ளார்.