ஹிந்து இளைஞரை தாக்கிய முஸ்லிம் கும்பல்

நாடு முழுவதும் ஹிந்து ஆண்களுடன் வெளியே செல்லும் முஸ்லிம் பெண்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற மற்றொரு சம்பவத்தில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு முஸ்லிம் பெண்ணுடன் உணவகத்திற்குச் சென்ற ஹிந்து இளைஞர் முஸ்லிம் கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார். மே 25, அன்று படேல் பாலம் அருகே உள்ள மதானி தர்பார் ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு நஸ்ரீன் சுல்தானா என்ற முஸ்லிம் பெண்ணுடன் திரும்பிக் கொண்டிருந்த பவேஷ் சன்ஹரே என்ற ஹிந்து இளைஞரை சுமார் 30 முஸ்லிம் இளைஞர்கள் துஷ்பிரயோகம் செய்தனர். தாக்கினர். இவர்கள் இருவரும் எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை காப்பாற்ற வந்த இருவருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் அந்த வன்முறை கும்பல் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து, வேறு மதத்தைச் சேர்ந்த ஒரு மனிதனுடன் ஏன் இருந்தீர்கள் என்று அந்தப் பெண்ணிடம் கேள்வி எழுப்பினர். மேலும், “நீங்கள் முஸ்லிம் அல்லாத ஒருவருடன் வெளியே செல்லத் தயாராக உள்ளீர்கள், ஆனால் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்ய முடியவில்லையா? உங்களுக்கு ஹிஜாப் மற்றும் இஸ்லாத்தின் விதிகள் தெரியாதா? நீங்கள் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் (இஸ்லாத்தின்) சட்டத்தை பின்பற்றவில்லை. இஸ்லாத்தை குறைத்து விடாதீர்கள், இஸ்லாத்தை வீழ்த்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றனர். அதற்கு அந்தப் பெண், தனது பெற்றோருக்குத் தெரிவித்து விட்டு தான் அந்த இளைஞருடன் இரவு உணவு சாப்பிட வந்ததாக அவர்களிடம் கூறினார். அவர்களின் இந்த மோசமான மற்றும் தவறான நடத்தைக்கு ஆட்சேபனை தெரிவித்தார். இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த துகோகஞ்ச் காவல் நிலைய அதிகாரிகள், இதுவரை ஏழு குற்றவாளிகள் அடையாளம் கண்டுள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கும்பலை சேர்ந்த மற்றவர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது என துகோகஞ் காவல்நிலைய ஆய்வாளர் கமலேஷ் சர்மா தெரிவித்தார்.